மேலும் அறிய

வெளுத்து வாங்கிய கனமழை: வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் வரும் ஜூன் 25 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 22 ஆம் தேதி, தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும், புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. ஜூன் 23 ஆம் தேதி, தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை   மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது” எனத் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை துவங்கியது முதல், வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இன்றும் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
மதுரை இளைஞர்களே! தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மிஸ் பண்ணிடாதீங்க
மதுரை இளைஞர்களே! தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மிஸ் பண்ணிடாதீங்க
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Idumbavanam Karthik: ’’அரசியலுக்கு வாங்க..நேருக்கு நேர் மோதுவோம்!’’ இடும்பாவணம் கார்த்திக் சவால்DMK MLA VS People: ’’யாருக்கு வேணும் உன் சோறு..!’’Mla-வை சுத்துப்போட்ட பெண்கள்கடும் வாக்குவாதம்Pushpa 2 | காவு வாங்கிய புஷ்பா 2 நெரிசலில் சிக்கிய தாய் பலி உயிருக்கு போராடும் மகன் | Allu ArjunGovt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
மதுரை இளைஞர்களே! தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மிஸ் பண்ணிடாதீங்க
மதுரை இளைஞர்களே! தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மிஸ் பண்ணிடாதீங்க
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
"நகை வாங்குபவர்கள் தான் டார்கெட்" 2 கிலோ தங்கத்திற்காக கடத்தல்! சிக்கிய கும்பல்!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
Embed widget