மேலும் அறிய

ஆ.ராசாவிற்கு மிரட்டல் விடுத்த விவகாரம்; கோவை பாஜக தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு

பாலாஜி உத்தமராமசாமி மீது ஏற்கனவே 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில், கூடுதலாக வன்கொடுமை பிரிவை சேர்த்து நீதிமன்றத்தில் ஆவணங்களை காவல் துறையினர் தாக்கல் செய்தனர்.

திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா, கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர். .ராசாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க கோரி பா..., இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பீளமேடு காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கடந்த 18ம் தேதியன்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி முதலமைச்சர் ஸ்டாலின், .ராசா, பெரியார் ஆகியோரை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் பேசியதாக குறிப்பிட்டுள்ளனர். பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இதனிடையே இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேசிய காட்சிகள் வெளியாகின. அதில் ஆ.ராசா மற்றும் திமுகவினர் குறித்து தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்து பேசியிருந்தார். “ஸ்டாலினுக்கு முதலமைச்சராக தகுதி இருக்கா? .ராசா சிறுபான்மை சமுகத்தை சேர்ந்தவர். பொய் சொல்லி சீட் வாங்கி ஜெயித்தவர். தொடர்ந்து ஆ.ராசா இப்படி பேசினால் கோவை மாவட்டத்தில் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் கோவை ஏர்போர்ட்டில் கால் எடுத்து வைக்க விடமாட்டோம். நாடாளுமன்ற தொகுதிக்குள் செல்ல முடியாது.

இந்த தேதியில் வருகிறேன் எனக்கூறி போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் கால் எடுத்து வை பார்க்கலாம்.. அத்தனை திமுகவினரும் சேர்ந்து போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வா பார்க்கலாம் கோவை மாவட்டத்திற்குள். நீ எங்கே கால் எடுத்து வைக்கிறேன் என பார்க்கிறேன். இது பகிரங்க சவால். தயாரா திமுகவினர்? .ராசாவை எங்கே கூப்பிட்டு வருகிறீர்கள் என சொல்லுங்கள் பார்க்கலாம். சனதான தர்மத்தை ஒழிப்பதாக எவனாவது வந்தால் செருப்பால் அடிப்பேன். யார் நீங்க எல்லாம்? என்ன தெரியும் இந்து சனதான தர்மத்தை பற்றி? இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பின் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.


ஆ.ராசாவிற்கு மிரட்டல் விடுத்த விவகாரம்; கோவை பாஜக தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு

இந்நிலையில் பாஜக கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது பீளமேடு காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று அதிகாலையில் அவரை வீட்டில் இருந்து பீளமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் பாலாஜி உத்தம ராமசாமியை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில் ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனிடையே பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்படதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.. உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாஜக கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். .ராசாவை இழிவுபடுத்தி பேசியதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், கூடுதலாக வன்கொடுமை பிரிவை சேர்த்து கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆவணங்களை காவல் துறையினர் தாக்கல் செய்தனர். இதையடுத்து இவ்வழக்கு கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
Embed widget