மேலும் அறிய

பச்சிளம் குழந்தைகளை வைத்து யாசகம் – வடமாநில பெண்கள் மீது சந்தேகம்

பச்சிளம் குழந்தைகளை வைத்துப் யாசகம் எடுத்த வடமாநில பெண்கள். குழந்தைகள் மீட்க நல மையத்தில் ஒப்படைப்பு.

கோவை மாநகரில் பச்சிளம் குழந்தைகளை கையில் ஏந்தியபடி யாசகம் எடுத்து வந்த வடமாநில பெண்களிடம் இருந்து 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தைகள் அவர்களுடைய சொந்தக் குழந்தைகள் அல்ல என்ற தகவல் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததால், குழந்தை கடத்தல் கும்பல் தொடர்பா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கோவைபுதூர், மரக்கடை, உக்கடம் உள்ளிட்ட நகரின் முக்கிய போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் நெரிசல் அதிகம் காணப்படும் சந்திப்புகளில் கடந்த சில நாட்களாக வடமாநிலத்தைச் சேர்ந்த சில பெண்கள், சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு வாகன ஓட்டிகளிடம் யாசகம் எடுத்து வந்தனர். கடும் வெயிலும் மழையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளை பயன்படுத்தி யாசகம் எடுப்பது பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வடமாநில பெண்களிடம் இருந்து 10 குழந்தைகள் மீட்பு

இதனை தொடர்ந்து, நேதாஜி இளைஞர்கள் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அந்தப் பெண்களை தடுத்து வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவர்கள் கூறிய தகவல்களில் முரண்பாடு இருந்ததால் உடனடியாக குழந்தைகள் நல வாரியத்திற்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் இருந்த 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நல மையத்தில் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட குழந்தைகள் மிகவும் குறைந்த வயதுடையவர்கள் என்பதும், அவர்களில் சிலர் அந்த பெண்களின் சொந்தக் குழந்தைகள் அல்ல என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த குழந்தைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டனர், குழந்தைகள் கடத்தல் சம்பவமா, அல்லது யாரிடமிருந்து பெற்ற குழந்தைகளா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவையில் நாளை (24-07-2026) எங்கெல்லாம் பவர் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (24-07-2026) எங்கெல்லாம் பவர் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore power cut: கோவையில் நாளை (23-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (23-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (22-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (22-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut (21-07-2026): கோவையில் நாளை 7 மணி நேரம் மின்சாரம் இருக்காது! எங்கெல்லாம் தெரியுமா?
கோவையில் நாளை 7 மணி நேரம் மின்சாரம் இருக்காது! எங்கெல்லாம் தெரியுமா?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட 3 மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட 3 மெகா ஹிட் படங்கள்!
Embed widget