மேலும் அறிய

’சுப ஸ்ரீ மரணத்தில் உண்மை கண்டறியப்படும்’ - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

”இவ்வழக்கு தொடர்பாக ஈஷா யோகா மையம், செம்மேடு பகுதிகளில், பதிவாகியிருக்கக்கூடிய கண்காணப்பு கேமாராக்கள் பதிவுகள், சுபஸ்ரீ மற்றும் அவரது கணவரின் கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரணை நடக்கிறது”

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அரசுப் பணியாளர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிகுமார் (40). திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் தர ஆய்வாளராக பணியாற்றி வரும் இவர், தனது மனைவி சுப ஸ்ரீ (34) மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி சுப ஸ்ரீ நியூ திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணி புரிந்து வந்தார். இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவை ஆலாந்துறை பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடந்த யோகா பயிற்சியில் சுப ஸ்ரீ கலந்து கொண்டார். அதேபோல கடந்த டிசம்பர் 11ம் தேதியன்றும் யோகா பயிற்சியில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

பழனிகுமார் தனது வாகனத்தில் சுப ஸ்ரீயை அழைத்து வந்து, அம்மையத்தில் விட்டு சென்றுள்ளார். பின்னர் ஒரு வார கால பயிற்சி முடிந்த பின்னர், கடந்த டிசம்பர் 18 ம் தேதியன்று பழனிகுமார், தனது மனைவியை அழைத்துச் செல்ல மீண்டும் வந்துள்ளார். நீண்ட நேரம் காத்திருந்த போதும் சுப ஸ்ரீ வராததால் சந்தேகம் அடைந்த பழனிகுமார், அம்மையத்திற்குள் சென்று விசாரித்துள்ளார். அப்போது பயிற்சி வகுப்பு முடிந்து அனைவரும் சென்று விட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பழனிகுமார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது வகுப்பில் இருந்து வெளியே செல்லும் சுப ஸ்ரீ, சாலையில் ஓடிச் சென்று ஒரு காரில் ஏறிச் செல்லும் காட்சிகள் இருப்பதைப் பார்த்துள்ளார்.

’சுப ஸ்ரீ மரணத்தில் உண்மை கண்டறியப்படும்’ - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

இதனிடையே பழனிகுமாரின் செல்போன் எண்ணிற்கு ஒரு மிஸ்ட் கால் வந்துள்ளது. அந்த எண்ணிற்கு அழைத்துப் பேசிய போது, தான் டாக்சி டிரைவர் எனவும், தனது காரில் ஏறிய பெண் ஒருவர் தனது கணவரிடம் பேச வேண்டுமென போன் வாங்கியதாகவும், அவர் உங்களுக்கு அழைத்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார். மேலும் போன் எடுக்காததால் போனை திரும்ப என்னிடமே தந்து விட்டார் எனவும், செம்மேடு முட்டத்துவயல் பகுதியில் அந்த பெண் இறங்கி சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் பழனிகுமார் மனைவியை தேடி கிடைக்காத நிலையில், காணாமல் போன தனது மனைவி சுப ஸ்ரீயை கண்டுபிடித்து தருமாறு ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சுப ஸ்ரீயை தேடும் பணிகள் நடைபெற்று வந்தது.

’சுப ஸ்ரீ மரணத்தில் உண்மை கண்டறியப்படும்’ - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

இதனிடையே கடந்த ஜனவரி 1ம் தேதியன்று காலை செம்மேடு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். அப்போது உயிரிழந்த பெண் சுப ஸ்ரீ என்பது தெரியவந்தது. இதையடுத்து சுபஸ்ரீயின் உடல் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், ”சுபஸ்ரீ காணாமல் போனதை அறிந்து 19.12.2022 அன்று ஆலந்துறை காவல்நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் முறையாக விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள். பின்னர் துலுக்கன்காடு தோட்டம் அருகில் இருக்கக்கூடிய கிணற்றில் சுபஸ்ரீ இறந்து கிடந்தது தெரிய வந்திருக்கிறது. அவரது உடல் மீட்கப்பட்டு கோவை மருத்துவக் கல்லூரியில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சுபஸ்ரீயின் உடல் கணவர் பழனிக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்த வழக்கு தொடர்பாக ஈஷா யோகா மையம் மற்றும் செம்மேடு பகுதிகளில், பதிவாகியிருக்கக்கூடிய கண்காணப்பு கேமாராக்கள் பதிவுகள், சுபஸ்ரீ மற்றும் அவரது கணவரின் கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget