மேலும் அறிய

விஜய் ஆண்டனி சமூக பொறுப்புடன் பேச வேண்டும்; அவர் மீது மரியாதை உண்டு - அண்ணாமலை

”ஈபிஎஸ் ரோடு ஷோ போனால் எவ்வளவு பேர் வருவார்கள்? அவரை பார்க்க யாரும் தயாராக இல்லை. அவர்கள் ரோடு ஷோ போனால் அவரை பார்க்க மக்கள் வரமாட்டார்கள்”

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நான் யாரையும் செய்தியாளர் சந்திப்பிற்கு வாருங்கள் என அழைக்கவில்லை. என்னிடம் வந்தால் கருத்து கிடைக்கும் என்பதால் வருகிறார்கள். கருத்து சொல்ல முடியாத ஈபிஎஸ், திராட்சை பழத்தை எடுக்க முடியாததால், அந்தப் பழம் புளிக்கும் எனச் சொல்கிறார். நான் சொல்வதை தான் மோடியும் சொல்கிறார். 33 மாத காலமாக திமுக ஆட்சி நடக்கிறது. அதனால் இரண்டு கட்சிகளுக்கு தான் போட்டி. ஈபிஎஸ் ரோடு ஷோ போனால் எவ்வளவு பேர் வருவார்கள்? அவரை பார்க்க யாரும் தயாராக இல்லை. அவர்கள் ரோடு ஷோ போனால் அவரை பார்க்க மக்கள் வரமாட்டார்கள். அதனால் மக்களை அழைத்து சென்று பட்டியில் அடைத்து வைத்து, எழுதி வைத்து படிப்பதை கேட்க வைக்கிறார்கள். பிரதமர் மக்களை பார்க்க வருகிறார். மக்கள் பிரதமரை பார்க்க வருகிறார்கள். இது ஜனநாயகமா? ரோடு ஷோவை மக்கள் தரிசன யாத்திரை என்று நாங்கள் சொல்கிறோம்.

மோடி அளிக்கும் கேரண்டி

டி.ஆர்.பி. ராஜாவின் அப்பா சமூக விரோதி. அவரின் அப்பாவே சாராயம் விற்று வருகிறார். நூற்றுக்கணக்கான நண்பர்களை குடிக்க வைத்து கொன்றவர்கள். பல பெண்களின் தாலி அறுத்தவர். எங்களை சமூக விரோதிகள் என்பது நகைச்சுவையின் உச்சம். கோபால புரத்தின் ஊழல் குடும்பம் 2024 தேர்தலுக்கு பின் சிறையில் இருப்பார்கள் என மோடி கேரண்டி கொடுப்பார். குடும்ப அரசியலை ஒழிப்பேன், பிரிவினை பேசுபவர்களை அடக்குவார் என மோடி கேரண்டி கொடுப்பார். ஸ்டாலின் கொடுக்கும் கேரண்டி உப்பு சப்பு இல்லாததது. சமூக வலைதளங்களில் சபரீசன் நிறுவனம் 7 கோடியே 33 இலட்சம் விளம்பரத்திற்கு செலவு செய்துள்ளது. பாஜகவின் மீது போலியான கட்டமைப்பு கடந்த 60 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கட்டமைத்து வைத்துள்ளனர். அந்த பிம்பங்கள் எல்லாம் தேர்தலுக்கு பிறகு உடையும்.

விஜய் ஆண்டனி சமூக பொறுப்புடன் பேச வேண்டும்; அவர் மீது மரியாதை உண்டு - அண்ணாமலை

மாமன்னன் படம் நான் பார்க்கவில்லை. போலி பிம்பம் தெரியும் வேண்டும் என்றால் மாமன்னன் பாருங்கள். சமூக நீதி படம் எடுப்பவர்கள் எல்லாம் பணத்திற்கு தான் எடுக்கிறார்கள். உதயநிதி ஒரு குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா? ரோலக்ஸ் என்று வைத்துள்ளார். தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லை. திமுகவினர் மோசமான ஆட்கள். 2024 ஆண்டுக்கு பிறகு அதிகாரிகள் எத்தனை பேர் சிறைக்கு செல்கிறார்கள் என பாருங்கள். திமுக ஆட்சி நிரந்தரமாக இருக்க போவதில்லை. திமுகவிற்கு எதிராக நான் அரசியல் தைரியமாக செய்து வருகிறேன். என்னை பற்றி திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நேற்று பதில் சொல்லியுள்ளார். ஊழல் யுனிவர்சிட்டி வேந்தராக பிரதமர் இருக்க வேண்டுமானால், அந்த ஊழல் யூனிவர்சிட்டியின் பெயரே ஸ்டாலின் யுனிவர்சிட்டி என வைக்க வேண்டும்.

முதல்வர் ஆசை இல்லை

முதல்வர் ஆசை எனக்கு இல்லை. அரசியலை நேர்மையாக செய்ய விரும்புகிறேன். ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத நபர் முக ஸ்டாலின். பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறாது என்பது தான் எதிர்கட்சிகளின் விவாதம். தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற வேண்டும். கோவையில் பண அரசியல் என்ற பேயை மக்கள் ஒட்ட வேப்பிலை உடன் காத்திருக்கின்றனர். விஜய் ஆண்டனி சமூக பொறுப்புடன் பேச வேண்டும். அவர் மீது மரியைதை நான் வைத்துள்ளேன். ஒரே நாடு ஒரே தேர்தல் வர போகிறது. கருணாநிதியும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும். அதனால் மோடியை கருணாநிதி மேலே இருந்து வாழ்த்துவார்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை
Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Tamilnadu RoundUp: இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்! கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்!
Tamilnadu RoundUp: இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்! கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்!
Embed widget