மேலும் அறிய

Rajinikanth: கோவை வந்த ரஜினிகாந்திற்கு உற்சாக வரவேற்பு.. திரளாக குவிந்த ரசிகர்கள்..!

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்திற்கு அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நடைபெற்ற தனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா உடன் கோவைக்கு வருகை தந்தார். நடிகர் ரஜினிகாந்த் வருவதை முன்னரே அறிந்த அவரது ரசிகர்கள், கோவை விமான நிலையம் முன்பாக கூடியிருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்திற்கு அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க தயாரான நிலையில், கூட்ட நெரிசலால் அவரால் சரிவர பதிலளிக்க முடியவில்லை. ஓரிரு வார்த்தைகளாக தனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவை வந்துள்ளதாக கூறினார். தொடர்ந்து காரின் மேல் நின்றவாறு ரசிகர்களுக்கு கையசைத்து அங்கிருந்து விடை பெற்றார்.

Rajinikanth: கோவை வந்த ரஜினிகாந்திற்கு உற்சாக வரவேற்பு.. திரளாக குவிந்த ரசிகர்கள்..!

முடி காணிக்கை:

கோவை சூலூரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் ஆண் குழந்தைக்கு முடிக்காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் விசாகன் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா மற்றும் கோவை சூலூரை சேர்ந்த தொழிலதிபர் வணங்காமுடி என்பவரது மகன் விசாகனை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில் சௌந்தர்யாவின் கணவர் விசாகனின் குலதெய்வ கோவிலான சூலூரில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் இன்று குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உற்சாக வரவேற்பு:

இதற்காக கோயில் வளாகத்தில் சிறப்பு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளுடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் குடும்பத்தினர் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் விசாகனின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். கோவை புறநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிக்காக விசாகன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தம்பதியினர் தங்களது குழந்தையுடன் கடந்த இரண்டு நாட்களாக  கோவையில் முகாமிட்டு விழா ஏற்பாடுகளை கவனித்து வந்தனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (20-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (20-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget