மேலும் அறிய

Crime: செல்போனில் ஆபாச படம் பார்ப்பவர்களை குறிவைத்து மோசடி: 9 பேர் கைது!

காவலர்கள் போல நடித்து பல்வேறு இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த கும்பலை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவையில் ஆபாச படம் பார்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் போல நடித்து பல்வேறு இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த கும்பலை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மருதமலை பகுதியைச் சேர்ந்தவர் சபரி. 23 வயதான இவர் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து, செல்போனில் ஆபாச படங்களை பார்க்கும் இளைஞர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள் சில இளைஞர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் ஆபாச படங்கள் பார்த்துள்ளீர்கள் எனவும், உங்கள் மீது நடமாடும் நீதிமன்றம் மூலம் மீது வழக்கு புனையப்பட உள்ளது எனவும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்களிடம் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். மேலும் செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது காவல் துறையினர் பயன்படுத்தும் வாக்கி டாக்கி ஒலியையும் எழுப்பி உள்ளார். இதனை உண்மை என நம்பிய இளைஞர்கள் சபரி கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளனர். இந்த முறையை பயன்படுத்தி கொண்டு சபரி மற்றும் அவரது சக நண்பர்கள் பல இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பணத்தை கொடுத்து பாதிக்கப்பட்ட சில இளைஞர்கள் சபரியின் குழு மீது சந்தேகமடைந்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் மருதமலை பகுதியை சேர்ந்த சபரி(23), நீலகிரியை சேர்ந்த ஜப்பான் (எ) ஆலன்(18), சரவணம்பட்டியை சேர்ந்த கிச்சா(எ) கிஷோர்குமார் (18),  குன்னூரை சேர்ந்த சின்னபகவதி (எ) பிரிவின் மோசஸ்(20), தேனியைச் சேர்ந்த வெய்ட்டி(எ) அபிஷேக் குமார்(20), குன்னூரை சேர்ந்த வடக்கு(எ) தனுஷ்குமார்(20) , நீலகிரி மாவட்டம் அரவங்காடு பகுதியைச் சேர்ந்த தோனி(எ) பிரவீன் குமார்(20), ரத்தினபுரியை சேர்ந்த அப்பு(எ) அகஸ்டின் (20) மற்றும் மனோஜ்(19) ஆகிய 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நீதிமன்ற காவலில் 9 பேரையும் சிறையில் அடைத்தனர். காவலர்கள் போல நடித்து ஆபாச படம் பார்த்த இளைஞர்களிடம் இலட்சக்கணக்கில் மோசடி செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget