நிச்சயம் ஆண்டவன் தண்டனை கொடுப்பான் - ஆ.ராசாவின் பேச்சை குறிப்பிட்டு உணர்ச்சிவசப்பட்ட முதல்வர் பழனிசாமி..
தாய் பற்றியும் பெண்கள் குறித்தும் இழிவாக பேசுபவர்களுக்கு நிச்சயம் ஆண்டவன் தண்டனை கொடுப்பான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தாயைப் பற்றியும் பெண்கள் குறித்தும் இழிவாக பேசுபவர்களுக்கு நிச்சயம் ஆண்டவன் தண்டனை கொடுப்பான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூர் அதிமுக வேட்பாளர் குப்பனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”என் தாயை எப்படியெல்லாம் இழிவுப்படுத்தி திமுகவினர் பேசுகின்றனர்” என குறிப்பிட்டு உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
”முதலமைச்சரின் தாயை பற்றியே இவ்வாறு பேசுபவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள், தாய்மார்களின் நிலை என்ன? அவர்களுக்கு இவர்களால் எப்படி பாதுகாப்பு வழங்கமுடியும் என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, தான் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்றும், தனது தாய் இரவு பகல் பாராமல் உழைத்தவர் எனவும் குறிப்பிட்டு, ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் உயிர் தந்தவர் தாய், அவரை இழிவுபடுத்துவர்களுக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பான்” என்று பேசியிருக்கிறார்.