Zero is good Meaning: 'ஜீரோ இஸ் குட்' அப்படினா என்ன தெரியுமா ? - அட இது சூப்பரா இருக்கே...!
Zero is Good in Chennai Meaning: ஜீரோ இஸ் குட் என்ற அறிவிப்பு பலகையில், காரணம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கடந்த சில நாட்களாக சென்னை முழுவதும் பல்வேறு சாலைகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூதன முறையில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு பலகையில் ஜீரோ இஸ் குட் ( Zero is Good ) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த நூதன அறிவிப்பு பலகைகளை, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வைத்துள்ளனர்.
Zero is Good Campaign
மஞ்சள் நிறத்தில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த அறிவிப்பு பலகை பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதே போன்று ஒரு சில ஆட்டோக்கள் பின்புறத்திலும் இதே வாசகம் பதியப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தத்திலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த நூதன பிரச்சாரம், வாகன ஓட்டிகள் இடையே கவனத்தைப் பெற்று வருகிறது. பலரும் இந்த வாசகம் எதற்கு வைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் என்ன விழிப்புணர்வை போக்குவரத்து போலீசார் ஏற்படுத்தப்பட உள்ளனர் என குழும்பி இருக்கின்றனர்.
அதிக மக்கள் தொகை கொண்ட சென்னையில் விபத்துக்கள் என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. வளர்ந்த நாடுகளை பொறுத்தவரை சாலை விபத்துக்கள் என்பது குறைவாகவே இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் சாலை விபத்துகள் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம், சாலை விதிகளை பொதுமக்கள் பின்பற்றுவதுதான் என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அவ்வப்பொழுது நூதன முறையில்...
அந்த வகையில் இந்தியா போன்ற நாடுகளில் சாலை விபத்துகள் குறைக்க, சாலை விதிகளை பின்பற்ற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துகளை குறைக்க, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவப்பொழுது நூதன முறையில் சென்னை போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சாலையில் பல இடங்களில் திடீரென ஒரு குறிப்பிட்ட வாசகங்களை கொண்ட, பேனர்கள், அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். சில நாட்கள் கழித்து அந்த அறிவிப்பு எதற்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இது போன்ற சென்னை மாநகரப் போக்குவரத்து போலீசார் நூதன முறையில், விழிப்புணர்வு ஏற்படுத்துவது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே வரவேற்பை பெற்று வருகிறது.
குழம்பிப்போன மக்கள்...
இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்ந்து சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், சென்னை மாநகர மக்களிடம் எதற்காக இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. பொதுமக்களும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில், தொடர்ந்து பல வகையிலான கணிப்புகளை வெளியிட்டனர். இந்தநிலையில் இந்தப் பிரச்சாரம் தொடர்பான , முழு தகவலை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.
அப்படின்னா என்னதான் பா ?
சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் கூறுகையில், "உலகில் இருக்கக்கூடிய முக்கிய நகரங்களை காட்டிலும், சென்னை நகரை போக்குவரத்தில் சிறப்பாக மாற்றுவதற்காக 'ஜீரோ ஆக்சிடென்ட் டே' ( Zero accident day ) என்ற முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு விபத்து கூற நடைபெறாத நாள்தான், நோ அக்சிடென்ட் டே கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதில் வெற்றி பெறலாம் அல்லது வெற்றி பெறாமலும் போகலாம். ஆனால் இது ஒரு சிறந்த முயற்சி" என தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், "ஜீரோ டே என்பது விபத்து மட்டும் ஜீரோ இல்லாமல், ஜீரோ விதிமீறல், ஜீரோ அபராதம் மற்றும் ஜீரோ சலான் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதுபோன்று அனைத்தும் ஜீரோவா ஆகும்பொழுது, சென்னை பெருநகர் போக்குவரத்து காவல்துறையில் கரப்ஷன் ஜீரோவாகும்" என தெரிவித்தார். இந்த ஜீரோ ஆக்சிடெண்ட் டே ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது.