மேலும் அறிய
Advertisement
Azhagu Muthu kone: காஞ்சிபுரத்தில் பரபரப்பு... தடையை மீறி அழகு முத்துக்கோன் சிலை திறப்பு
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் அருகே யாதவ சத்திரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் சிலை திறப்பு விழாவில், யாதவ மகா சபையினருக்கும், பாதுகாப்பிற்கு நின்ற போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு.
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் அருகே யாதவ சத்திரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் சிலை திறப்பு விழாவில், யாதவ மகா சபையினருக்கும், பாதுகாப்பிற்கு நின்ற போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அழகு முத்துகோன்
காஞ்சிபுரம் (Kanchipuram News): இந்திய சுதந்திர போராட்ட வீரரான அழகு முத்துக்கோன், 266 ஆவது பிறந்தநாள் விழா விமரிசையாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் அமைந்துள்ள யாதவ மகாசபை சத்திரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் திருவுருவப் படத்திற்கு பல்வேறு கட்சியினர், சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து யாதவ மகா சபையின் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி காஞ்சிபுரத்தின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது.
சிலையை திறந்து வைக்க முற்பட்டனர்
இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவை ஒட்டி யாதவ மகா சபை சார்பில் வீரர் அழகு முத்துகோனுக்கு சிலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற இருந்தது. யாதவ சத்திரத்தின் பகுதியில் அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டு இருந்த அழகு முத்துக்கோன் சிலையை திறக்க வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் தடை விதித்து இருந்தனர். சிலை திறப்பு விழா நடைபெறுவதையொட்டி அதனை தடுத்து நிறுத்த வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் குவிக்கப்பட்டு இருந்தனர். பேரணி சென்று விட்டு வந்த யாதவ மகா சபையினர் அரசு அனுமதி இன்றி வைக்கப்பட்ட அழகு முத்துக்கோன் திருவுருவசிலையை திறந்து வைக்க முற்பட்டனர்.
தள்ளுமுள்ளு
பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசாரும் வருவாய்த்துறை இருந்தும் யாதவ மகா சபை நிர்வாகிகளை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளுமுள்ளுவை மீறி யாதவ மகா சபையினர் வீரர் அழகுமுத்துக்கோன் திருவுருவ சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். போலீசார் வருவாய்த் துறையினர் தடையை மீறி சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலை திறந்து வைக்கப்பட்ட சம்பவத்தால் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion