மேலும் அறிய
Advertisement
வியாசர்பாடியில் பிரபல செல்போன் திருடன் நண்பருடன் கைது
சி.சி.டி.வி கேமரா பதிவுகளை பார்த்த போது ராஜேந்திரன் டீசல் போடும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் செல்போனை திருடி செல்வது தெரியவந்தது
சென்னை வியாசர்பாடி 5 ஆவது பள்ளத் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (56). இவர் கடந்த 25 ஆம் தேதி மாலை தனது காரில் வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது வண்டியை நிறுத்தி விட்டு வண்டியில் இருந்து கீழே இறங்கி டீசல் போடுவதை கண் காணித்துக் கொண்டிருந்தார். டீசல் போட்டு விட்டு மீண்டும் வாகனத்தில் அமர்ந்து வண்டியை எடுத்த போது வண்டியில் வைத்திருந்த செல்போன் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சிய டைந்தார்.
இது குறித்து எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.எம்.கே.பி நகர் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை பார்த்த போது ராஜேந்திரன் டீசல் போடும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் செல்போனை திருடி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து சி.சி.டிவி கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் நகர் பகுதி யைச் சேர்ந்த வசந்த் (22) மற்றும் கொருக்குப்பேட்டை, பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்கின்ற சைக்கோ சங்கர் (22) ஆகிய 2 பேரையும் எம்.கே.பி நகர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளன. இதனையடுத்து இவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொடுங்கையூரில் வழிப்பறி திருடன் கைது
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆர்.ஆர்.நகர் தண்டையார்பேட்டை நெடுஞ் சாலை அருகே கத்தியைக் காட்டி மிரட்டி பொது மக்களை மர்ம நபர் ஒருவர் அச்சுறுத்துவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. அதன் பேரில் அங்கு சென்ற கொடுங்கையூர் போலீசார் அப்பகுதியில் நின்றிருந்த மூலக்கடை நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் வயது 19 என்ற நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அவரிடம் ஒரு கத்தி பறி முதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் அவர் மீது ஏற்கனவே பல வழிப்பறி வழக்குகள் உள்ளதாகவும் நேற்று வழிப்பறி செய்வத ற்காக அவர் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஐயப்பன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion