மேலும் அறிய

பாஜகவிடம் விஜய் எச்சரிக்கை! செங்கோட்டையன் முடிவுக்கு பின்னால் சூழ்ச்சியா? - திருமாவளவன் பரபரப்பு பேட்டி

அதிமுகவில் உள்ள செங்கோட்டையன், தவெகவில் (தமிழக வெற்றிக் கழகம்) இணைவதாக வரும் செய்திகள் எந்த அளவுக்கு உறுதியானது என்று தெரியவில்லை. திருமாவளவன்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாஜக-விடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருக்கிறாரா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் அரசியல் சூழ்ச்சி இருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அரசியலமைப்பு தினத்தையொட்டி அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கேக் வெட்டப்பட்டது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பேசியதாவது:

மதவாத சக்திகளின் முயற்சிகளிலிருந்து அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஜனநாயகச் சக்திகளுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வீர வணக்கம் செலுத்தபட்டது. இலங்கையில் புதிய அரசமைப்புச் சட்டம் மாற்றி எழுதப்படும் சூழலில், ஈழத் தமிழர்களின் கோரிக்கையான கூட்டாட்சி நிர்வாக முறை மற்றும் தமிழர் இறையாண்மையை அங்கீகரிப்பதை வி.சி.க. வரவேற்பதாகவும், ஆதரிக்கிறது. இந்திய-இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் தலையீடு செய்து, தமிழர்களுக்கான இறையாண்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசுக்கு வேண்டுகோள்.

சிறப்பு தீவிர சீராய்வு நடவடிக்கை (SIR) என்பது குடியுரிமையைக் குறிவைத்து நகர்த்தப்படும் ஒன்று என வி.சி.க. தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. இது வெறும் வாக்காளர் பட்டியல் சீராய்வு அல்ல, குடியுரிமை குறித்த சீராய்வுதான் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார்.

தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, அரசமைப்புச் சட்டத்தையே கேலிக் கூத்தாக்கும் முயற்சி. இதனை முற்றாகக் கைவிட வேண்டும். SIR நடவடிக்கைக்கு எதிராக வி.சி.க. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திகிறது.

தமிழ்நாட்டில் மொழிச் சிறுபான்மை உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் கூறுவது குறித்து, "யார் தமிழ்நாட்டை தனிமைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அவர் விளக்க வேண்டும்". ஆளுநரின் நடவடிக்கைகள் சங்க பரிவாரங்களின் போக்கிற்கு ஏற்ப இருப்பதாகவும், தமிழ்நாட்டின் கோரிக்கை இந்திய தேச எல்லைக்குள் தேசிய இனத்துக்கான உரிமைகளை வழங்குவதுதான், தமிழ்நாட்டை அந்நியப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவது ஆளுநர்தான்.

அதிமுகவில் உள்ள செங்கோட்டையன், தவெகவில் (தமிழக வெற்றிக் கழகம்) இணைவதாக வரும் செய்திகள் எந்த அளவுக்கு உறுதியானது என்று தெரியவில்லை. அவர் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருக்கிறாரா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் அரசியல் சூழ்ச்சி இருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாஜக-விடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் , அவரது கட்சியில் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விமர்சனங்கள் இருப்பதாகவும், மேலும் ஊடுருவல்கள் நிகழ்ந்தால் அவருடைய அரசியல் கேள்விக்குறியாகும். இவ்வாறு அவர் பேசினார்.

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கோரியுள்ளது குறித்த கேள்விக்கு, கரூர் சம்பவத்தில் உயிரிழப்புகள் நடந்ததைக் குறிப்பிட்டு, எந்த அரசியல் கட்சியும் ரோடு ஷோ போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதே வி.சி.க.வின் நிலைப்பாடு என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முதல்வர் போல் செயல்படுங்கள் , எதிர்க்கட்சி தலைவர் போல் பேசாதீர்கள் - விஜயை விமர்சித்த தமிழிசை
முதல்வர் போல் செயல்படுங்கள் , எதிர்க்கட்சி தலைவர் போல் பேசாதீர்கள் - விஜயை விமர்சித்த தமிழிசை
Chennai Power Cut: சென்னையில் நாளை(03-06-2026) பவர் கட்... எந்த இடத்தில்? முழு விவரம் உள்ளே
Chennai Power Cut: சென்னையில் நாளை(03-06-2026) பவர் கட்... எந்த இடத்தில்? முழு விவரம் உள்ளே
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
Parandur Airport: பரந்தூர் விமான நிலையம் வருமா? வராதா? முதல்வர் வசம் செல்லும் ரிப்போர்ட்!
பரந்தூர் விமான நிலையம் வருமா? வராதா? முதல்வர் வசம் செல்லும் ரிப்போர்ட்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
A Raja Slams CM Vijay: “Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
“Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
Iran on Hormuz: நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Embed widget