மேலும் அறிய

சென்னையில் தாமதமான விமானம்; 131 பயணிகள் பரிதவிப்பு - அதிகாரிகளுடன் வாக்குவாதம்

Chennai News: சென்னையில் இருந்து மதுரை செல்ல வேண்டிய இரண்டு விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகியதால் 131 பயணிகள் விமான நிலையத்தில் தவித்தனர்.

சென்னையில் இருந்து மதுரை செல்ல வேண்டிய இரண்டு விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகியதால், 131 பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 
 
சென்னை  ( Chennai Aiport ) : சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4:55 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மதுரைக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். விமானத்தில் பயணம் செய்ய 53 பயணிகள் இருந்தனர். அவர்கள் மாலை 3:30 மணிக்கு முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து, பாதுகாப்பு சோதனை அனைத்தையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். ஆனால் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இரவு 7 மணி ஆகியும் அந்த விமானம் புறப்படவில்லை.
 

மதுரை பயணிகள் விமானம்

 
இந்த நிலையில் மாலை 6:10 மணிக்கு, சென்னையில் இருந்து மதுரைக்கு மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு செல்ல வேண்டும். அந்த விமானத்தில் 78 பயணிகள் பயணிக்க இருந்தனர். அந்த விமானமும் தாமதமாக, இரவு 7 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும், என்று அறிவிக்கப்பட்டது. அதோடு மாலை 4:55 மணி விமானத்தில் மதுரை செல்ல இருந்த 53 பயணிகளும் இந்த விமானத்தில் சேர்த்து அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
 

அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம்:

 
ஆனால் இரவு 8  மணி ஆகியும், மதுரை செல்ல வேண்டிய விமானம் புறப்படவில்லை. இதனால் சென்னையில் இருந்து மதுரைக்கு 2  விமானங்களில் செல்ல வேண்டிய, 131 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருந்தனர். அதோடு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அதிகாரிகளிடம் காட்டும் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டனர். அதன் பின்பு இரவு 8:30  மணிக்கு, இரண்டு விமானங்களிலும் பயணிக்க வேண்டிய 131 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் இருந்து மதுரைக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது. 
 

போதிய பயணிகள் இல்லாமல்

 
இந்த விமானங்கள் தாமதத்திற்கு என்ன காரணம் என்று, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் பயணிகளுக்கு  தெளிவாக அறிவிக்கவில்லை. ஆனால் விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள் இல்லாததால், இந்த விமானங்கள் காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மாலை 5:55  மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று இரவு 11:35 மணிக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் பயணிக்க, போதிய பயணிகள் இல்லாமல் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Embed widget