(Source: Poll of Polls)
காவலர் நினைவு நாள் அனுசரிப்பு: ஒத்திகை நிகழ்ச்சிக்காக சென்னையில் போக்குவரத்து மாற்றம்
கண்ணகி சிலையிலிருந்து காமராஜர் சாலை வழியாக சாந்தோம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் லாயிட்ஸ் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக கலங்கரை விளக்கத்திற்கு செல்லலாம்.
சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதையொட்டி, ஒத்திகை நிகழ்ச்சிகளுக்காக அக்டோபர் 16 ,18, 19,21ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,
21.10.2021 அன்று காலை 08.00 மணிக்கு சென்னை-4, காவல் துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் காவலர் நினைவு நாள் அனுசரிப்பதை ஒட்டி அக்டோபர் மாதம் 16,18 மற்றும் 19-ம் தேதிகளில் இது தொடர்பான ஒத்திகை நடைபெற இருக்கிறது. ஆகவே மேற்கண்ட 16,18,19,21 ஆகிய 4 நாட்களுக்கு கீழ்கானும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1.சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் காரணீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பில் இடது புறம் திரும்பி காரணீஸ்வரர் பகோடா தெரு,அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாக டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை அல்லது காமராஜர் சாலை செல்லலாம் .
2. சாந்தோம் சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்துகள் சாந்தோம் சிக்னலில் இடது புறம் திரும்பி கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பால் நகர் பிரதான சாலை மற்றும் பி .எஸ் .சிவசாமி சாலை ராயபேட்டை மெயின் ரோடு இடது புறம் திரும்பி ராதா கிருஷ்ணன் சாலை சென்று அவரவர் இலக்கை அடையலாம்.
3. கண்ணகி சிலையிலிருந்து காமராஜர் சாலை வழியாக சாந்தோம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் லாயிட்ஸ் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக கலங்கரை விளக்கம், காரணீஸ்வரர் கோயில் சந்திப்பிற்கு செல்லலாம்.
4. டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை வழியாக கண்ணகி சிலைக்கும் மற்றும் கலங்கரை விளக்கம் வழியாக சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை கலங்கரை விளக்கம் எம்.ஆர்.டி.எஸ் அருகில் இடது புறம் திரும்பி லாயிட்ஸ் சாலை சர்வீஸ் ரோடு வழியாக காமராஜர் சாலைக்கும், கடற்கரை சாலை சர்வீஸ் ரோடு வழியாக கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் செல்லலாம்.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டப்படுகிறது.
சென்னை பெருநகர காவல் செய்தி:#chennaicitypolice #greaterchennaipolice#chennaipolice pic.twitter.com/pdTmBnj7ew
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) October 14, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்