மேலும் அறிய

மழையில் மக்களை காப்பாற்ற இதையெல்லாம் செய்யுங்க: அதிகாரிகளிடம் லிஸ்ட் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

அதிகாரிகளிடம் தெரிவித்தோம், உடனடியாக நிவர்த்தி செய்தார்கள் என மக்கள் கூறுவதே மிகப்பெரிய பாராட்டு என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தெரிவித்தார்

அதிகாரிகளிடம் தெரிவித்தோம், உடனடியாக நிவர்த்தி செய்தார்கள் என மக்கள் கூறுவதே மிகப்பெரிய பாராட்டு என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 இன்று (1.11.2022) முகாம் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கிறது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு இயல்பாக 448 மி.மீ மழை கிடைக்கப்பெறுகிறது. இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையின்படி, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில் இயல்பான மழை அளவை விட கூடுதலாக 35% முதல் 75% வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 29.10.2022 அன்று தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இன்று (1.11.2022) திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை. வேலூர். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை (2.11.2022) செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் கனமழையும் 3.11.2022 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. கடலூர். பெரம்பலூர். அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர். திருப்பூர், தேனி. திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும், அதேபோன்று 4.11.2022 அன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி. கடலூர், பெரம்பலூர். அரியலூர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், நீலகிரி. கோயம்புத்தூர். திருப்பூர். தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி. கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முக்கிய அணைகளில் நீர்த்தேக்கங்களில், 43 நீர்த்தேக்கங்கள் 75% முதல் 100 % வரையும், 17 நீர்த்தேக்கங்கள் 50% முதல் 75% வரையும் நிரம்பியுள்ளன. எனவே இந்த நிலையில், மாநிலத்தில் அதிக கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதால், பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும் எனவும் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கைப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளுக்கு தாமதமின்றி மீட்புப் படையினை அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே மீட்டு, நிவாரண மையங்களில் பாதுகாப்பாக தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்கவும், பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் போது முதியோர்களுக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கும். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவும், பழுதடைந்த / பலவீனமான சுற்றுச் சுவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், முகாம்களில் தங்க வைக்கப்படும் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்திடவும், மழைக்காலங்களில் தொற்று வியாதிகள் / டெங்கு போன்றவை பரவாமல் தடுத்திட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், மருத்துவ முகாம்கள் நடத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார். அத்துடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைத்திட தேவையான நடவடிக்கைள் எடுத்திடவும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைத் தாமதமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைத்து அரசு துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டுமென்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். மழை காலத்தில் இடி மின்னல் தாக்குதலால் உயிரிழப்பு ஏற்படுவதை குறைத்திட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்றும், வெள்ளப்பாதிப்புள்ளாகும் பகுதிகளில் தேவையான நீர் இறைப்பான் இயந்திரங்களையும், மரம் அறுக்கும் கருவிகளையும், மணல் மூட்டைகளையும் தயார் நிலையில் வைத்திட வேண்டும் என்றும் நிலச்சரிவு, மண்சரிவு, பாறை சரிவுகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து கவனம் செலுத்தி. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசரக்கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் 1070 கட்டணமில்லாத் தொலைபேசி சேவையைப் பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் மழைக் காலங்களில் பல்வேறு தொற்றுநோய்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் காய்ச்சிய குடிநீரையே குடித்திட வேண்டும் என்றும், மின்சார சாதனங்களை கவனமாக கையாள வேண்டும் என்றும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும். மீனவர்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். இதுபோன்ற பெருமழை மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் காலங்களில் இரவுபகல் பாராது பணியாற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து தொடர்ந்து இதே அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற கேட்டுக்கொண்டார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
Embed widget