மேலும் அறிய

Patta ; சொத்து வாங்கும் முன் இதை கவனிக்கலனா சிக்கல் !! தவிர்க்க முடியாத எச்சரிக்கை

சொத்திற்கு பட்டா இருந்தால் போதும் , அது யார் பெயரில் இருந்தால் என்ன, பத்திரப் பதிவுக்கு பின் நம் பெயருக்கு மாற்றப்படும் என்று நினைக்காதீர்

பட்டா - முழுமையாக மாற்றம் செய்து இருக்க வேண்டும்

வீடு , மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது அதன் உரிமையாளரிடம் முறையான பட்டா உள்ளதா என்று பார்க்க வேண்டியது அவசியம். அதுவும் அந்த பட்டா அவர் பெயரில், முறையாக மாற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது அவசியம்.

ஒரு சொத்து விற்பனைக்கு வருகிறது என்றால் அதன் உரிமையாளர் பெயரில் கடைசியாக பதிவு செய்யப்பட்ட கிரைய பத்திரம் இருக்க வேண்டும். அந்த பத்திரம் தொடர்பான வில்லங்க சான்று விபரங்கள் சரியாக இருப்பது அவசியம். இதில் அந்த பத்திரத்தில் சொத்து விபரங்கள், போன்ற அடிப்படை விபரங்களில் எவ்வித பிழையும் இல்லை என்பதை உறுதிபடுத்த வேண்டியது அவசியம்.

இதே போன்று உரிமையாளர் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு இருப்பது அவசியம் பெரும்பாலான இடங்களில், சொத்துக்கு பட்டா இருக்கும், ஆனால், அது தற்போதைய உரிமையாளர் பெயரில் இருக்காது. அவருக்கு முன் அந்த சொத்தை வைத்திருந்தவர் பெயரில் பட்டா இருக்கும் என்பதையும் பார்க்க வேண்டி உள்ளது.

சொத்து பட்டா இருந்தால் போதும் அது யார் பெயரில் இருந்தால் என்ன, பத்திரப் பதிவுக்கு பின் நம் பெயருக்கு மாற்றப்படும் என்று நினைக்காதீர். பழைய உரிமையாளர்கள் பெயரில் பட்டா இருப்பது மிகப் பெரிய குற்றமாக பார்க்கப்படுவதில்லை. ஆனால், அந்த பட்டாவில் உரிமையாளர் பெயர், நில அளவு போன்ற விபரங்களில் எவ்வித எழுத்து பிழையும் இருக்க கூடாது.

அவ்வாறு பிழை இருந்தால், புதிதாக அந்த சொத்தை வாங்கியவர் பெயருக்கு மாற்றும் போது தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். பழைய உரிமையாளர் பெயரில் ஒரிரு எழுத்துகள் பிழையாக இருந்தாலும் அடுத்தவர் பெயருக்கு மாற்றும் போது பிரச்சனை ஏற்படும்.

அதே நேரம் அந்த பட்டாவில் பிழைகளை சரி செய்து கொடுக்குமாறு தற்போதைய உரிமையாளரிடம் கேட்பதற்கு வழி இருக்கிறது. ஆனால், தற்போதைய நிலையில், பட்டா போன்ற ஆவணங்களில் பிழைகளை சரி செய்வதில் வருவாய் துறை உரிய கவனம் செலுத்துவதில்லை.

பட்டாவில் பிழைகளை சரி செய்ய கோரி வரும் விண்ணப்பங்கள் மீது இறுதி முடிவு எடுப்பதற்கு அதிகாரிகள் தயங்குகின்றனர். எனவே, பழைய பட்டாவை நம்பி சொத்து வாங்கும் போது, அதில் பிழை இல்லாமல் பார்த்து கொள்வது அவசியம்.

இந்த விஷயத்தில் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள். பட்டாவில் பழைய உரிமையாளர் பெயரில், ஒரிரு எழுத்துகள் பிழையாக இருந்தாலும் அடுத்தவர் பெயருக்கு மாற்றும் போது பிரச்சனை ஏற்படும். பிழைகளை சரி செய்து கொடுக்குமாறு தற்போதைய உரிமையாளரிடம் கேட்பதற்கு வழி இருக்கிறது.

தலைப்பு செய்திகள்

Chennai GST Road: ஒரே லைனில் பேருந்து, ரயில், மெட்ரோ சேவைகள்..! ரூ.2.117 கோடியில் சென்னையில் மெகா அப்க்ரேட்
ஒரே லைனில் பேருந்து, ரயில், மெட்ரோ சேவைகள்..! ரூ.2.117 கோடியில் சென்னையில் மெகா அப்க்ரேட் திட்டம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி? GST சாலை முதல் வேளச்சேரி வரை புதிய திட்டம்!
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி? GST சாலை முதல் வேளச்சேரி வரை புதிய திட்டம்!
Kilambakkam: அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Uttarakhand iPhone theft :
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
Embed widget