மேலும் அறிய
Thaipusam 2023:பெருநகரில் கூடிய பக்தர்கள்... தைப்பூசப் பெருவிழாவான இன்று இங்கு என்ன நடக்கும் தெரியுமா?
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், பெருநகர் கிராமல்தில் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்

தைப்பூசம்
காஞ்சிபுரம் மாவட்டம் , காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உள்ள புகழ்பெற்ற பெருநகர் பட்டுவதனாம்பிகை உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில், தைப்பூச திருவிழா கடந்த மாதம், 27 இல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வருகிறார். இதில், ஏழாம் நாள் உற்சவமான கடந்த 2 இல், தேரோட்டம் நடந்தது.

இதில், ஒன்பதாம் நாள் உற்சவமான நேற்று காலை, 63 நாயன்மார்கள் மஹா உற்சவம் நடந்தது. உற்சவத்தையொட்டி, 63 நாயன்மார்களுக்கும் நேற்று அதிகாலை, சிறப்பு அபிேஷக அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, நாயன்மார்கள் வீதியுலா புறப்பாடு நடந்தது. ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் சிவ பூதகண திருக்கயிலாய வாத்தியக்குழுவினர், சிவ கண வாத்தியங்களை இசைத்தபடி சென்றனர். தொடர்ந்து பட்டுவதனாம்பிகை பிரம்மபுரீஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர் முன்னே செல்ல, 63 நாயன்மார்கள் பின்தொடர்ந்து சென்றனர். தைப்பூச விழாவின் முக்கிய உற்வமான, செய்யாற்றில், 20 ஊர் சுவாமிகள் எழுந்தருளும் தைப்பூச தரிசனம், இன்று இரவு, 10:00 மணிக்கு நடக்கிறது.

தைப்பூசம் திருவிழா
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை மற்றும் விரத நாட்களில் ஒன்று தைப்பூசம் ( Thaipusam ). தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலோசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் உலக தமிழர்களும், முருகபெருமானுக்கு உகந்த முக்கிய நாளான தைப்பூச திருவிழாவை கொண்டாடுவது வழக்கம். இந்த திருநாளில் பக்தர்கள் முருகபெருமானுக்காக அலகு குத்தி காவடி தூக்கி வீட்டில் முருகனுக்கு நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.

தைப்பூசம் 2023 :
தை மாதம் 22 ஆம் தேதி பிப்ரவரி 05ஆம் தேதி தைப்பூசம் என கணக்கிடப்பட்டுள்ளது. தை மாதம் 21ஆம் தேதி காலையில் 09 மணிமுதல் பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகிறது. அடுத்தநாள் தை 22ஆம் தேதி மதியம் 12:13 மணி வரை பூசம் நட்சத்திரம் இருக்கிறது. பிப்ரவரி 5ஆம் தேதி காலை முதலே இந்த நட்சத்திரம் இருப்பதால் அன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
தைப்பூச விரதம் (Thaipusam Fasting):
4-ம் தேதி மாலை தைப்பூச திருவிழா தொடங்குகிறது. ஆனால் அன்றைய தினம் பௌர்ணமி இல்லை. அடுத்தநாள் 5-ந் தேதிதான் பௌர்ணமி உள்ளது. அன்றைய தினம்தான் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. சிலர் திதியை வைத்து 4ஆம் தேதி என கூறுகின்றனர், ஒரு சிலர் நட்சத்திரம் வைத்து பிப்.5ஆம் தேதி என்கின்றனர்.

பிப்ரவரி 4ஆம் தேதி மாலை தொடங்கி 5ஆம் தேதி வரை விரதம் மேற்கொள்ளலாம். அதே சமயம் 5-ந் தேதி காலை தொடங்கி 5ந் தேதி மாலை வரைக்கும் விரதத்தை மேற்கொண்டால், போதுமானது. இரவு முருகனுக்கு என்ன பலகாரம் அல்லது நெய்வேத்தியம் செய்யப்படுகிறதோ அதே நெய்வேத்தியத்தை நாமும் உட்கொள்ளலாம் என கூறப்படுகிறது. விரதம் கடைபிடிக்கும்போது நடுவில் பசித்தால் முருகப்பெருமானுக்கு படைக்கின்ற பால் பழங்களை சாப்பிட்டுக்கொள்ளலாம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















