பெரியார் திடல் என் தாய்வீடு.... உலக மொழிகளில் பெரியாரின் சிந்தனைகள் வெளியிடப்படும்.... முதலமைச்சர் ஸ்டாலின்!
ஆண்டுதோறும் பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் எனக கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
144ஆவது பிறந்தநாள்
பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர் என்ற பெயர்களால் அறியப்படும் தந்தை பெரியார் தமிழ்நாட்டின் பெரும் இயக்கமான திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தவர்.
மானத்தையும் அறிவையும் வளர்க்கச் சொல்லி, சாதிய வேறுபாடு, பெண் விடுதலை, தீண்டாமை, சமூக நீதி, மூட நம்பிக்கைகள் ஒழிப்பு என தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக குரல் கொடுத்து வந்த தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை
இந்நிலையில், முன்னதாக தந்தை பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
#LIVE: பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாளில் அவரது திருவுருவச்சிலைக்கு மலர் மரியாதை https://t.co/9nrmkjaYTc
— M.K.Stalin (@mkstalin) September 17, 2022
சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள அவரது சிலைக்கு திமுக நிர்வாகிகளுடன் இணைந்து முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆண்டுதோறும் பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் எனக கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
சமூக நீதி உறுதிமொழி
அதன்படி முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற சமூக நீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்வில், முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது, இந்தியாவுக்குமான சமூக நீதி தலைமையகம் பெரியார் திடல்.
உலக மொழிகளில் பெரியாரின் சிந்தனை
Quotes of Thanthai Periyar#CMMKSTALIN | #TNDIPR |#பெரியார்@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/O5fKtTz4Sx
— TN DIPR (@TNDIPRNEWS) September 17, 2022
பெரியார் திடல் எனது தாய் வீடு; இங்கு எப்போது வந்தாலும் புத்துணர்ச்சி பெறுகிறேன். பெரியாரின் சிந்தனைகளை மொழிப்பெயர்த்து உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிட இருக்கிறோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, தமிழ்நாட்டில் சமூகநீதி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காகத் தமிழ்நாடு அரசால் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
”கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அளவுகோல் முறையாக, முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை இக்குழு கண்காணிக்கும்; வழிகாட்டும்; செயல்படுத்தும். சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்யும். இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள்” என்றும் தெரிவித்திருந்தார்.