மேலும் அறிய

தமிழ் நிலம் ஜியோ செயலி முடக்கமா ? நில உரிமை தகவல்கள் App - ல் மறைக்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்

நிலத்தின் சர்வே எண் , பட்டா , வரைபட விபரங்களை , மக்கள் எளிதாக அறிவதற்காக துவக்கப்பட்ட தமிழ் நிலம் ஜியோ செயலி முழுமையான தகவல்கள் இல்லாமல் , முடங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ் நிலம் ஜியோ ஆஃப் ; 

தமிழகத்தில் நிலங்கள் குறித்த வருவாய் துறை ஆவணங்கள் மற்றும் தகவல்கள் , தமிழ் நிலம் தகவல் தொகுப்பில் இணைக்கப்பட்டு உள்ளன. இதில் ஒரு குறிப்பிட்ட நிலத்தின் அமைவிடம் , சர்வே எண் விபரங்களை உள்ளீடு செய்தால் , அதன் பட்டா விபரங்களை மக்கள் அறியலாம்.

இந்த வசதியை எளிமைப்படுத்தும் வகையில் , தமிழ் நிலம் ஜியோ இன்போ என்ற புதிய செயலி , இந்த ஆண்டு ஜனவரியில் துவக்கப்பட்டது. இந்த செயலியை பொதுமக்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து எளிதாக பயன்படுத்தலாம் என்றும் , வருவாய் துறை அறிவித்தது.

அதாவது , மாவட்டம் , தாலுகா , கிராமம் , சர்வே எண் போன்ற விபரங்களை உள்ளீடு செய்து , பட்டா, 'அ' பதிவேடு , நில வரை பட விபரங்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி , சர்வே எண் போன்ற அடிப்படை விபரங்கள் இல்லா விட்டாலும் , கூகுள் வரைபடத்தில் நீங்கள் தேர்வு செய்யும் இடத்தின் சர்வே எண் , பட்டா எண் , வரைபட விபரங்களை அறியவும் வசதி செய்யப்பட்டது.

புதிதாக வீடு , மனை வாங்கும் மக்கள் , இந்த செயலியை பயன்படுத்தி , சொத்துக்கள் குறித்த உண்மையான தகவல்களை பெறலாம் என, வருவாய் துறை தெரிவித்தது. ஆனால் , அந்தத் துறையின் அதிகாரிகள் , இந்த செயலியில் தேவையான தகவல்களை பதிவேற்றம் செய்யாமல் முடக்கி வைத்துள்ளனர் என்ற புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது ; 

நிலம் தொடர்பான விபரங்களை , பொதுமக்கள் மொபைல் போன் வாயிலாக எளிதாக அறிய , முதல்வர் அறிவிப்பு அடிப்படையில் இந்த செயலி உருவாக்கப்பட்டது.

செயலி முறையாக செயல்பட்டால் , நில விபரங்களை தேடி பொது மக்கள் , கிராம நிர்வாக அலுவலர் முதல் தாசில்தார் வரை உள்ள அதிகாரிகளை நாடி செல்ல வேண்டியதிருக்காது.

ஆனால் , அவ்வாறு நடந்தால், தங்களுக்கான வசூல் பாதிக்கப்படும் என்பதால் , வருவாய் துறையினர் இதில் உரிய தகவல்களை பதிவேற்றம் செய்ய மறுப்பதாக தெரிகிறது.

இது போன்ற வசதியை துவக்கி வைத்த அதிகாரிகள் இதன் தொடர் செயல்பாடுகளை கண்காணிக்க தவறியதே பிரச்னைக்கு காரணம் என இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

வடகிழக்குப் பருவமழை: TN-ALERT செயலி மூலம் வானிலை எச்சரிக்கை.. பாதுகாப்பாக இருக்க உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
வடகிழக்குப் பருவமழை: TN-ALERT செயலி மூலம் வானிலை எச்சரிக்கை.. பாதுகாப்பாக இருக்க உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
Gold Rate Today: உடனே புறப்படுங்க.. ஒரே நாளில் ரூபாய் 3 ஆயிரம் குறைந்த தங்கம் விலை - இன்ப மழையில் மக்கள்!
Gold Rate Today: உடனே புறப்படுங்க.. ஒரே நாளில் ரூபாய் 3 ஆயிரம் குறைந்த தங்கம் விலை - இன்ப மழையில் மக்கள்!
CTET 2025: கனவு காண்போருக்கு காத்திருப்பு! தாமதமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை; கவலையில் தேர்வர்கள்!
CTET 2025: கனவு காண்போருக்கு காத்திருப்பு! தாமதமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை; கவலையில் தேர்வர்கள்!
Anbumani: அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!
Anbumani: அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Slams DMK | ”வீட்டுக்கு போவது உறுதி விவசாயிக்கு என்ன பண்ணீங்க” comeback கொடுத்த விஜய்
TVK Vijay | ’’20 லட்சம் வேணாம்விஜய் நேர்ல தான் வரணும்’’பணத்தை திருப்பி கொடுத்த பெண்
Manickam Tagore On Selvaperunthagai | டெபாசிட் இழந்த மாணிக்கம் தாகூர் வேட்டியை மடிக்கும் செ.பெருந்தகை
நீர்வளத்துறையில் சாதி செ.பெருந்தகை சொன்னது உண்மை? வெளியான திடுக்கிடும் தகவல்கள் | Selvaperunthagai VS Duraimurugan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வடகிழக்குப் பருவமழை: TN-ALERT செயலி மூலம் வானிலை எச்சரிக்கை.. பாதுகாப்பாக இருக்க உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
வடகிழக்குப் பருவமழை: TN-ALERT செயலி மூலம் வானிலை எச்சரிக்கை.. பாதுகாப்பாக இருக்க உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
Gold Rate Today: உடனே புறப்படுங்க.. ஒரே நாளில் ரூபாய் 3 ஆயிரம் குறைந்த தங்கம் விலை - இன்ப மழையில் மக்கள்!
Gold Rate Today: உடனே புறப்படுங்க.. ஒரே நாளில் ரூபாய் 3 ஆயிரம் குறைந்த தங்கம் விலை - இன்ப மழையில் மக்கள்!
CTET 2025: கனவு காண்போருக்கு காத்திருப்பு! தாமதமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை; கவலையில் தேர்வர்கள்!
CTET 2025: கனவு காண்போருக்கு காத்திருப்பு! தாமதமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை; கவலையில் தேர்வர்கள்!
Anbumani: அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!
Anbumani: அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!
Artificial Rain: டெல்லியில் திடீரென பெய்த செயற்கை மழை.. எதற்காக தெரியுமா?
Artificial Rain: டெல்லியில் திடீரென பெய்த செயற்கை மழை.. எதற்காக தெரியுமா?
Chennai Power Cut: சென்னையில அக்டோபர் 29-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில அக்டோபர் 29-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? விவரம் இதோ
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Amazon Layoff: ஒரே வாரம்.. 30 ஆயிரம் பேரை தூக்கி வீசும் அமேசான் - AI இருக்கு, உங்களுக்கு சம்பளம் எதுக்கு?
Amazon Layoff: ஒரே வாரம்.. 30 ஆயிரம் பேரை தூக்கி வீசும் அமேசான் - AI இருக்கு, உங்களுக்கு சம்பளம் எதுக்கு?
Embed widget