மேலும் அறிய
Vandalur Zoo : வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் செயல்படும்.. சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன தெரியுமா ?
" விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது "

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஷவரில் குளித்து மகிழும் யானை
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா
சென்னை புறநகர் பகுதியில் இந்தியாவிலேயே மிகப் பழமையான பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல ஆயிரக்கணக்கான பறவைகள், அரிதான பறவைகள், சிங்கம் புலி, கரடி, சிறுத்தை, மான், யானை, உள்ளிட்ட விலங்குகள் மக்கள் பார்வைக்காக வைக்கப்படுகின்றன. விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் குவிந்து விலங்குகளை ரசிப்பது வழக்கம் .

கோடை விடுமுறை
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் உயிரியல் பூங்காவிற்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செவ்வாய்கிழமை வார விடுமுறை தினமாக இருக்கும் நிலையில், கோடை விடுமுறை காரணமாக நாளை பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ. 90 கட்டணமாகவும், சிறியவர்களுக்கு ரூ. 50 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறையால் நேற்று ஒரே நாளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வண்டலூருக்கு வருகை தந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன ?
கோடை காலம் என்பதால் மக்கள் வந்து செல்வதற்கு சிறப்பு ஏற்பாடுகளை, வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் செய்துள்ளது. மக்கள் வெயில் தாக்கம் இல்லாமல் இருப்பதற்கு, ஆங்காங்கே தண்ணீர் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோடை காலத்தில் விலங்குகளும் உடல் சூட்டில் தணிப்பதற்காக அவ்வப்போது விலங்குகள் உடலில் தண்ணீர் அடிப்பது, யானை போன்ற உயிரினங்களுக்கு ஷவர் மூலம் விலங்குகளின் உடல் சூட்டை தணிப்பது என பல்வேறு ஏற்பாடுகளை வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் செய்துள்ளது.

அதேபோன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவு முறைகளிலும் சில மாற்றங்களை பூங்கா நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. கோடை காலம் என்பதால், உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளையும் , விலங்குகள் மகிழ்வித்து உண்பதற்காக குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்கு ஐசில் உறைய வைத்த பழங்கள் ( frozen fruits) உள்ளிட்ட உணவுப் பொருட்களை பூங்கா நிர்வாகம் வழங்கி வருகிறது. அதேபோல் பொதுமக்களுக்கு ஆங்காங்கே கூடுதலாக தண்ணீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கட்டணம் செலுத்தி பயன்படுத்தக்கூடிய பேட்டரி கார் வசதிகள், தனியாக சென்று பூங்காவை சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாக, மிதிவண்டிகள் மூலம் செல்வதற்கான ஏற்பாடுகள் கூட பூங்கா நிர்வாகம் செய்துள்ளது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement