மேலும் அறிய
Advertisement
தந்தை இறந்தாலும் இறுதி சடங்கில் பங்கேற்காமல் கண்ணீரோடு பொதுத் தேர்வு எழுத வந்த மாணவி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் கண்ணீருடன் பொதுத்தேர்வு எழுத வந்த மாணவி
பத்தாம் வகுப்பு பொது தேர்வு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. ஸ்ரீபெரும்புதூர் கல்வி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட தேர்வு மையத்தில் மாணவ மாணவியர் ஆர்வமுடன் தேர்வு எழுத வந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிலிங்கம் (40). கட்டிட கூலி வேலை செய்து வந்த, இவருக்கு கடந்த 6 மாதங்களாக மஞ்சள் காமாலை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை ஜோதிலிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கண்ணீருடன் தேர்வு மையத்திற்கு வந்த மாணவி
ஜோதிலிங்கத்தின் மகள் விஷாலினி ஸ்ரீ பெரும்புதூர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு , எழுதுவதற்காக தேர்வு மையத்திற்கு வரும் போதே கண்களில் கண்ணீரோடு சோகமாக வந்தார். சக மாணவிகள் விஷாலினியிடம், விவரம் கேட்கவே தனது தந்தை இறந்த தகவலை கூறி கண்ணீர் விட்டு அழுதார். நேற்று தந்தை இறந்தாலும் இறுதி சடங்கில் பங்கேற்காமல் பொதுத் தேர்வு எழுத வந்த விஷாலினி கண்களில் கண்ணீரோடு தேர்வு மையத்திற்கு வந்தது சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion