சென்னையில் ஸ்ரீ பத்ராசல ராமர் தரிசனம்; சிறப்பு பூஜை, நிகழ்ச்சிகளின் முழு விவரம் இதோ!
ரீ பத்ராசல ராமர் தரிசனம் சென்னையில் நடைபெறும் நாள், சிறப்பு பூஜைகள் குறித்த விவரங்களை இங்கே காணலாம்.
சென்னையில் முதல் முறையாக ஸ்ரீ பத்ராசல ராமர் மற்றும் 20 அடி உயர அனுமன் தரிசனம் நிகழ்வு நடைபெற உள்ளது.
பக்த பாரத சேவா அறக்கட்டளை சார்பில் சென்னையில் முதன் முறையாக ஸ்ரீ பத்ராசல ராமர் தரிசனம் நடைபெற ஏற்பாடு செய்துள்ளனர். மூன்று நாள் நடைபெறும் நிகழ்வில் சிறப்பு பூஜைகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதன்படி, நாளை (28-ம் தேதி )தொடங்கி சனிக்கிழமை (29.06.2024), ஞாயிறுக்கிழமை (30.06.2023) ஆகிய நாட்களில் தி.நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஸ்ரீ பத்ராசல ராமர் மற்றும் 20 அடி உயர அனுமன் தரிசனம் தர உள்ளனர்.
ஸ்ரீ பத்ராச்சலா ராமர் கோயில் கோதாவரியின் திவ்ய கேத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, மேலும் தட்சிண அயோத்தியாகவும் மதிக்கப்படுகிறது, மைய சின்னம் நான்கு ஆயுதமேந்திய வைகுண்ட ராமரைக் கொண்டுள்ளது, விஷ்ணு வடிவம் பத்ரா பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்க தோன்றியது. ராமாஸ் கன்சர்ட் சீதா மற்றும் சகோதரர் லட்சுமணன் ஆகியோர் மத்திய சின்னத்தின் ஒரு பகுதியாக உள்ளனர், சிலர் பத்ராச்சலம் கோயில் கட்டப்பட்டது மற்றும் பிற கணக்குகள் புகழ்பெற்ற பக்தி துறவி காஞ்சர்லா கோபனாவால் பழுதுபார்க்கப்பட்டன, இது பத்ராச்சலா ராமதாசா என்றும் அழைக்கப்படுகிறது.இந்த கருத்து எங்கள் அறக்கட்டளை திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது கீழே கொடுக்கப்பட்டுள்ளது
விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (28-ம் தேதி) 1008 புடவைகளால் சீதாதேவிக்கு அர்ச்சனை செய்யப்பட ய்ள்ளது. அதன்பிறகு, 108 விளக்கு பூஜை, காலை 6 மணிக்கு சுப்ரபாதம் நிகழ்ச்சி, புத்ரகாமேஷ்டி யாகம், ஸ்ரீ ராமப்ரபாவம் உயன்யாசம் மற்றும் ஆரத்தி நடைபெறும். சிறப்பு அர்ச்சனை முடிந்தபிறகு புடவைகள் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விழா நாட்களில் ராமரின் மகிமை குறித்த சொற்பொழிவுகளும் பக்தி பாடல்களில் கச்சேரியும் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள கட்டணம் ஏதும் செலுத்த வேண்டாம் என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்:
ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கல்யாண மண்டபம்
27,1பி, ஹிந்தி பிரசார் சபா சாலை,
தி. நகர்
சென்னை-600017
நிகழ்ச்சி விவரம்:
முதல் நாள் - வெள்ளிக்கிழமை - 28.06.2024:
- காலை 6:00 -7:00 மணி - சுப்ரபாதம்
- காலை 7:30 - 9:30 மணி: ராமப்ரபாவம் உபன்யாசம் - ஸ்ரீ உ.வே. அனந்தபத்,அநாபாசார்
- காலை 10:30 - மதியம் 12:00 மணி - புத்ரகாமேஷ்டி யாகம் : ஸ்ரீ வைகானச ஆகம சிரோன்மணியின் - ஸ்ரீ ஸ்ரீனிவாச பட்டாச்சார், கும்பகோணம்
- நண்பகல் 3:00 - மாலை 5:00 மணி - 108 விளக்கு பூஜை
- மாலை 5:00 - 5:30 மணி - ஆரத்தி
- மாலை 5:30 - 7:00 மணி: பஜனை- V. கார்த்திக் ஞானேஷ்வர் பாகவதர் மற்ற்றும் குழு
- இரவு 7:00 - 9:00 மணி - ஸ்ரீமதி ஐஸ்வர்யகுமாரி செளந்தர்யா (பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி பேத்தியும் சங்கீத ரத்னகர டாக்டர் ராதா விஸ்வநாதன் பேத்தி)
- இரவு 9:00 - 9:30 மணி - ஆரத்தி
இரண்டாம் நாள் - சனிக்கிழமை/ 29.06.2024
- காலை 6:00 -7:00 மணி - சுப்ரபாதம்
- காலை 7:30 - 9:30 மணி: பத்ராச்சலா ராமர் உபன்யாசம், ஸ்ரீ உ.வே. அக்காராக்கனி தி.அ.ஸ்ரீநிதி ஸ்வாமிகள்
- காலை 10:30 - மதியம் 12:00 மணி - சீதா தேவிக்கு 1008 புடவை அர்ச்சனை
- மதியம் 1:00 - 2:00 மணி - பரதநாட்டியம் - எஸ். மதுஸ்மிதா
- மதியம் 2:00 - மாலை 3:00 மணி - கர்நாடிக் கீபோர்டு - வித்வான் அதித்யா விஷாக்
- மாலை 3:00 - 4: 30 மணி - சீதா கல்யாணம் - ஸ்ரீ வைகானச ஆகம திலகம் ராகவ பட்டாசார்
- மாலை 4:30 - 5:00 மணி - ராமர் விஷேச ஆரத்தி
- மாலை 5:00 -7:00 மணி : ராமர் கதை வில்லு பாட்டு - கலைமாமணி திருமதி. பாரதி திருமுகன்
- இரவு 7:00 - 9:00 மணி - ஸ்ரீ ராமர் கீர்த்தனம் - பின்னணி பாடகி திருமதி.நித்யஸ்ரீ மகாதேவன்
- இரவு 9:00 - 9:30 மணி - சயன ஆரத்தி
மூன்றாம் நாள் - ஞாயிறு/ 30.06.2024
- காலை 6:00 -7:00 மணி - சுப்ரபாதம்
- காலை 9:00 - 10:00 மணி - ஹரி நாம சங்கீர்த்தனை - இஸ்கான் சென்னை பக்தர்கள்
- காலை 10:00 - 11:30 மணி - ஸ்ரீ சாய் நித்யாலயா மாணவர்களின் பரத நாட்டியம் திமேடிக் ப்ரசெண்டேசஜ் (ஆச்சார்யா HN. நந்தினி சுரேஷ்)
- காலை 11:30 - மதியம் 01:00 மணி - ராமர் பாடல் - ஸ்ரீ அஞ்சனா மாருதி பஜனை. நங்கநலூர்
- மதியம் 2:30 - மாலை 04:00 மணி - ராமர் பட்டாபிஷேகம்
- மாலை 04:00 - 04:30 மணி - ராமர் விஷேச ஆரத்தி
- மாலை 04:30 - 06:00 மணி - பஜனை - V. கார்த்திக் ஞானேஸ்வர் பாகவதர் மற்றும் குழு
- மாலை 06:00 - 07:00 மணி - கலைமாமணி ஸ்ரீ சத்யநாரயணன் மற்றும் குழுவினர் கிபோர்ட்
- மாலை 07:00 - இரவு 08:00 மணி - ஸ்ரீ ராமர் பாடல்கள் - கர்நாடக இசை மற்றும் திரைப்பட பின்னணி பாடகி திருமதி எஸ். மஹதி
- இரவு 09:00 - 9:30 மணி - சயன ஆரத்தி