மேலும் அறிய

தீபாவளிக்கு மறுநாள்: மூன்று நாட்களுக்கு சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கம்...தமிழக அரசு அறிவிப்பு!

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

Special Buses: தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

களைகட்டும் தீபாவளி பண்டிகை:

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இப்பண்டிகை வரும் நிலையில் கடைவீதிகளில் பட்டாசு வாங்கவும், புத்தாடைகள் எடுக்கவும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேசமயம் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் மீண்டும் வெளியூர் திரும்புவதற்கு வசதியாக நவம்பர் 13 ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறார்கள். 

இதனிடையே தமிழ்நாடு அரசு சார்பில் கிட்டதட்ட நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் வழக்கமாக வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் சேர்த்து சுமார் 10,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கிட்டதட்ட 80 ஆயிரம் முன்பதிவுகள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் ரயில்கள், ஆம்னி பஸ்களில் டிக்கெட்டுகள் முடிவடைந்து விட்டது. மேலும் சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் ஊர் திரும்ப நவம்பர் 13, 14,15 ஆகிய தேதிகளில் மொத்தம் 6 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

மாநகர சிறப்பு பேருந்துகள்:

சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு, தாம்பரம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி பைபாஸ், மாதவரம், கே.கே.நகர் ஆகிய இடங்களில் பயணிகளின் வசதிக்காக பேருந்துகள் பிரித்து விடப்பட்டுள்ளன.  அதேபோல, தீபாவளி முடிந்து சொந்து ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் போது சென்னை புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்கள், கூட்ட  நெரிசலில் சிச்காமல் வீடுகளுக்கு செல்ல ஏதுவாக தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, சென்னையில் வரும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மாநகர பேருந்து சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் 60 மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் சென்னை நகரம் உள்ளே மட்டும் இயங்கும்.   சென்னையில் உள்ள மண்டல கிளை மேலாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை மேலாண் இயக்குநர் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 

புகார் எண்:

தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மைய எண்களை அறிவித்துள்ளது. 149 என்ற மூன்று இலக்க புதிய உதவி மைய எண் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ | Japan Movie Review: கார்த்திக்கு கை கொடுத்ததா தீபாவளி ரேஸ்? ’ஜப்பான்’ போலாமா வேணாமா? முழு விமர்சனம் இதோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
விஜய்க்கு தலைவலியை தரும் நிர்வாகிகள்;  தவெகவினர் மீது வழக்கு பதிவு.. ஏன் தெரியுமா ?
விஜய்க்கு தலைவலியை தரும் நிர்வாகிகள்; தவெகவினர் மீது வழக்கு பதிவு.. ஏன் தெரியுமா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
விஜய்க்கு தலைவலியை தரும் நிர்வாகிகள்;  தவெகவினர் மீது வழக்கு பதிவு.. ஏன் தெரியுமா ?
விஜய்க்கு தலைவலியை தரும் நிர்வாகிகள்; தவெகவினர் மீது வழக்கு பதிவு.. ஏன் தெரியுமா ?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
TNPSC Notification: வந்தாச்சு அடுத்த அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Notification: வந்தாச்சு அடுத்த அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
Embed widget