மின்சார ரயில்கள் ரத்து.. சென்னை கடற்கரை- செங்கல்பட்டு பயணிகள் கவனிங்க..
சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது அதேபோன்று மின்சாரம் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ள அறிவிப்பில், பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 . மதுரையில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு சம்பர்க் கிராண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டு, மேல்பாக்கம், அரக்கோணம், பெரம்பூர், கொருக்குப்பேட்டை வழியாக இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரம், சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் நிற்காது.
2. செங்கல்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் வழித்தடத்தில் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12615) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் வழித்தடத்தில் இயக்கப்படும்.
As part of ongoing engineering works, Line Block/Power Block is permitted in Chennai Egmore - #Villupuram section between #Chennai Beach & #Chennai Egmore on 14th July 2024
— Southern Railway (@GMSRailway) July 12, 2024
Passengers are requested to take note on this & plan your #SouthernRailway #RailwayUpdate pic.twitter.com/1A8Hc8SatG
3 சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை காலை 7.45 மணி முதல் இரவு 7.45 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, காலை 9.20 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 24 சிறப்பு மின்சார ரயில்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
4 . இதேபோன்று திருச்சிராப்பள்ளி- அகமதாபாத் சிறப்பு எக்ஸ்பிரஸ் வண்டி சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று செங்கல்பட்டு கச்சிகுடா எக்ஸ்பிரஸ், தாம்பரம் புதுடெல்லி கிராண்ட் ட்ரக் எக்ஸ்பிரஸ், தாம்பரம் ஐதராபாத் சார்மினார் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதற்கு ஏற்றவாறு பயணத்தை திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது
கட் சர்வீஸ் பேருந்து
இந்தநிலையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (14.07.2024) அன்று தென்னக இரயில்வேயின் பராமரிப்பு பணிகள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கும் பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடையே நடைபெற உள்ளது. இதனால் தென்னக ரயில்வே சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
பயணிகள் நலன் கருதி மாநகர் போக்குவரத்துக் கழகம் கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை கட் சர்வீஸ் பேருந்துகளை இயக்கப்படவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.