மேலும் அறிய

சென்னை ; மசாஜ் சென்டரில் அதிர்ச்சி !! பாலியல் தொழில் கைது !! பரபரப்பு தகவல்

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது. 6 பெண்கள் மீட்பு. 1 செல்போன் பறிமுதல்

சென்னை ; மசாஜ் சென்டரில் அதிர்ச்சி !! பாலியல் தொழில் கைது !! பரபரப்பு தகவல்

சென்னை கோடம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , கோடம்பாக்கம் வரதராஜபேட்டை மெயின் ரோட்டில் உள்ள மசாஜ் சென்டரை கண்காணித்த போது அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன் பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் சோதனைகள் மேற்கொண்டு அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய மதுரை மாவட்டம் தினமணி நகரை சேர்ந்த சுமதி ( வயது 29 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன், Swiping Machine-1, ஆகியவை  பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த 6 பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் சுமதி அவரது பெண் தோழியுடன் சேர்ந்து இடத்தை வாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்ததும் சுமதி மீது பாலியல் தொழில் செய்தது தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட சுமதி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 6 பெண்களும் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள தலைமறைவான நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஏ.டி.எம் மையத்தில் பணம் டெபாசிட் செய்து கொண்டிருந்த நபரை மிரட்டி பணத்தை பறித்துச் சென்ற நபர் கைது. ரூ.8 லட்சம் அடங்கிய பணப்பை மீட்பு.  1 இருசக்கர வாகனம் பறிமுதல்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சையது முகமது ( வயது 31 ) என்பவர் கடந்த 24 ம் தேதி மாலை நேரத்தில் பையில் ரூ.10 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு அபிராமபுரம், சிருங்கேரி மடம் சாலையில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு சென்று அங்கு உள்ள டெபாசிட் இயந்திரத்தில் அவரது நண்பர்களின், வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து கொண்டிருந்த போது, அங்கு தலைக் கவசம் அணிந்து வந்த 2 நபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி மேற்படி சையது முகமது டெபாசிட் செய்தது போக மீதமிருந்த சுமார் ரூ.8,09,500 அடங்கிய பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து சையது முகமது அபிராமபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த பாண்டியராஜா ( வயது 24 )  என்பவரை 25 ம் தேதி கைது செய்தனர்.

அவரிடமிருந்து ரூ. 8 லட்சம் அடங்கிய பணப்பை மீட்கப்பட்டு குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 அரிவாள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட பாண்டியராஜா மீது ஏற்கனவே கோயம்பேடு மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையத்தில் 2 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. 

கைது செய்யப்பட்ட பாண்டியராஜா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். 
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு நபர்களை காவல் குழுவினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
" கஞ்சா புழக்கம்...பாதுகாப்பு எங்கே ? " அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்
Tondiarpet IOC Bus Terminus: 40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் அந்த பிரம்மாண்ட மாற்றம்!
40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் பிரம்மாண்ட மாற்றம்!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget