மேலும் அறிய

அணைய திறந்தா மீன் பிடிக்றாங்க.! ரெட் அலர்டுக்கு நடுவே செம்பரம்பாக்கத்தில் மீன் விற்பனை!

கடல் மீனை காட்டிலும் ஏரி மீன் சுவையாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் மீன்களை வாங்க குவிந்த வருகின்றனர்

கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியது. 3 தினங்களுக்கு முன்பு செம்பரம்பாக்கம் ஏரியில் முதற்கட்டமாக 500 கனஅடி நீரும், அடுத்தபடியாக ஆயிரம் கனஅடி நீர், பின்னர் 2000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் நேற்று முதல் மழை சற்று குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுள்ளது. இருப்பினும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
 

அணைய திறந்தா மீன் பிடிக்றாங்க.! ரெட் அலர்டுக்கு நடுவே செம்பரம்பாக்கத்தில் மீன் விற்பனை!
இன்று 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு அதிக அளவு மழை பெய்யக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக, தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது செம்பரம்பாக்கம் ஏரியை 20 அடியில் கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் பிறகு தொடர்ந்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தாலும் 23 அடி வரை தேக்கி வைத்து அதன் பிறகு படிப்படியாக உபரி நீரை திறந்துவிட முடிவு செய்திருப்பதாகவும், ஏரியில் இருந்து சீராக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
கடந்த 2015ஆம் ஆண்டு அடையாறு ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு போல் மீண்டும் நிகழாதவாறு செம்பரம்பாக்கம் ஏரி தீவிர கண்காணிப்பில் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்தான் செம்பரபாக்கம் சுற்றுவட்டார பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரியில் பிடிக்கும் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. 
 

அணைய திறந்தா மீன் பிடிக்றாங்க.! ரெட் அலர்டுக்கு நடுவே செம்பரம்பாக்கத்தில் மீன் விற்பனை!
தற்போது 2,000 கன அடி நீர் உபரி நீராக திறந்து விடப்பட்டுள்ள நிலையில் கால்வாய்களின் வழியாக உபரி நீரானது ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் கால்வாய்களில், செல்லும் நீர்களில் வலைகளை விரித்து அதிக அளவில் மீன்களை பிடித்து வருகின்றனர்.  தற்போது பெரிய அளவிலான மீன்கள் அதிக அளவில் கிடைப்பதால் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர். அவ்வாறு கிடைக்கும் கட்லா, கெண்டை, கெளுத்தி, ஜிலேபி, ஏரி வஞ்சிரம், தேளி உள்ளிட்ட பெரிய, பெரிய அளவிலான மீன்களை குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலை, காவனூர் கிராமம் அருகே சாலையோரம் கடைகள் அமைத்து மீன்களை விற்று வருகின்றனர். 

அணைய திறந்தா மீன் பிடிக்றாங்க.! ரெட் அலர்டுக்கு நடுவே செம்பரம்பாக்கத்தில் மீன் விற்பனை!
தொடர் மழை காரணமாக தமிழக அரசு விடுமுறை அளித்து இருப்பதால் இறைச்சி கடைகளுக்கு பொது மக்கள் படை எடுக்காமல், உயிருடன் கிடைக்கும் ஏரி மீன்களை அதிக அளவில் குடும்பத்துடன் வந்து ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். மேலும் இங்கு விற்கப்படும் மீன்கள் விலை மிகவும் குறைந்து காணப்படுவதால், பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். கடல் மீன்களை காட்டிலும் தற்போது ஏரி மீன்கள் குறைந்த விலைக்கும் உயிருடனும் கிடைப்பதால் பொதுமக்கள் அதனை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேவேளையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென அரசு அறிவுறுத்திய நிலையில் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாமென தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
" கஞ்சா புழக்கம்...பாதுகாப்பு எங்கே ? " அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்
Tondiarpet IOC Bus Terminus: 40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் அந்த பிரம்மாண்ட மாற்றம்!
40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் பிரம்மாண்ட மாற்றம்!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget