மேலும் அறிய
Advertisement
264-வது நாளாக நீளும் பரந்தூர் விமான நிலையம் விவகாரம்.. மொட்டை அடித்து, திருவோடு ஏந்தி மக்கள் போராட்டம்..!
இன்று 264-வது நாளாக ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் அடித்து கையில் திருவோடு ஏந்தி நெற்றியில் நாமம் விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் கிராமம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளதாக அறிவித்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று 264-வது நாளாக ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் அடித்து கையில் திருவோடு ஏந்தி நெற்றியில் நாமம் விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு மாற்றாக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. இதற்காக சுமார் 4500 ஏக்கர் விளை நிலங்கள், நீர்நிலைகள் குடியிருப்புகள் பாசன கால்வாய் உள்ளிட்டவைகள் கையகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
அன்று முதல் ஏகணாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாள்தோறும் வேலைக்கு சென்று விட்டு வந்து இரவு நேரங்களில் மத்திய,மாநில அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஒருபோதும் விவசாய நிலங்களை தரமாட்டோம் குடியிருப்புகளை விட்டு வெளியேற மாட்டோம் எனக் கூறி பல்வேறு வகைகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதுவரை இரண்டு முறை தமிழக அமைச்சர்கள் தலைமையிலான குழுவிடம் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழு கிராம கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்திய தோல்வி அடைந்து திட்டம் கைவிடப்படாமல் அடுத்த கட்ட நகர்வுக்கு சென்றுள்ளது. மேலும் கிராம சபை கூட்டங்களில் ஐந்து முறை பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் தமிழக கட்சிகள் என அனைவரும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவ்வப்போது கண்டன ஆர்ப்பாட்ட கூட்டங்களிலும் கலந்து கொண்டு வருகின்றனர்.
மேலும் பல்வேறு சமூக ஆர்வலர் குழுக்களும், பிரபல சமூக ஆர்வலருமான மேத்தா பட்கர் போராட்டக் களத்தில் போராடிவரும் மக்களை நேரடியாக சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தார். இந்நிலையில் நேற்று இரவில் இருந்தே மொட்டை அடிக்க துவங்கியுள்ள பரந்தூர் கிராம மக்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து கையில் திருவோடு ஏந்தி நெற்றியில் நாமம் விட்டு போராட்டம் நடத்த முடிவு செய்த ஏகனாபுரம் கிராம மக்கள். 264 நாளாக தொடர்ந்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று அடுத்த கட்ட போராட்டம் தொடங்கியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து நாமம் ஈட்டு வருகின்றனர். ஊர் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரும் மொட்டை அடித்துக் கொண்டு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion