மேலும் அறிய

Nirmala Devi Case:நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு - நாளை வெளியாகிறது தண்டனை விவரம்!

Nirmala Devi Case: கல்லூரி மாணவர்களை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

கல்லூரி மாணவர்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்த வழக்கில் முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்பளித்துள்ள நிலையில், அவரது தண்டனை விவரம் நாளை (30.04.2-2024) வெளியாக உள்ளது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலாதேவி, மாணவைகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்கள் விசாரணை நிறைபெற்றுள்ல நிலையில், இந்த வழக்கில்  நீதிபதி பகவதி அம்மாள் இன்று (29.04.2024) தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த வழக்கின்  தீர்ப்பு கடந்த வாரம் 26-ம் தேதி வழங்கப்பட இருந்தது. இந்த வழக்கு தொடர்பாக நிர்மலா தேவி தவிர பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்ப சாமி ஆகியோர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அதனால், வழக்கின் தீர்வு இன்று வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு பின்னணி: 

அருப்புக்கோட்டையிலுள்ள தனியார் கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியர் நிர்மலா தேவி (52).  இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி, தவறாக வழிநடத்தியதாக 2018 மே மாதம் ஆடியோ ஒன்று வைரலானது. நிர்மலா தேவியால் குறிவைக்கப்பட்ட மாணவிகள் சிலர், நிர்மலாதேவி பேசியதை பதிவு செய்து பெற்றோர்கள் மூலம் கல்லூரி நிர்வாகத்தில் புகார்செய்தனர். பெற்றொர்கள் கொடுத்த இந்த புகாரை கல்லூரி நிர்வாகம் அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, மாணவிகளிடம் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய அலைப்பேசி உரையாடல், சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரை கைது செய்யக் கோரி போராட்டம் தொடர்ந்தது. அதையடுத்து, நிர்மலாதேவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் கல்லூரி செயலாளர் ராமசாமி புகார் அளித்தார். மாணவிகள் 5 பேரும் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் 2018, ஏப். 16-ம் தேதி வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல் துறையின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் பல்கலைக்கழக உதவிப் பேராசியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் இந்த வழக்கில் கைது செய்தனர் காவல்துறையினர்.  இந்த வழக்கில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பப் பரிமாற்ற முறைகேடு தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு,  ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

இந்நிலையில் பேராசிரியர் நிர்மலாதேவி உட்பட 3 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானபோது,  பேராசியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இரண்டு பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். 
 5 பிரிவுகளின் கீழ் நிர்மலாதேவி குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. தண்டனை விவரம் நாளை (ஏப்.30,2024) அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Chennai Power Cut: சென்னையில் நாளை புதன் கிழமை (14.10.2026) எந்தெந்த இடங்களில் மின்தடை! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Cut: சென்னையில் நாளை புதன் கிழமை (14.10.2026) எந்தெந்த இடங்களில் மின்தடை! உங்க ஏரியா இருக்கா பாருங்க!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
Embed widget