மேலும் அறிய

நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பொய் சொல்வதுதான் இவரின் வாடிக்கை - அமைச்சர் சேகர் பாபு

சொல்லுகின்ற ஆளைப் பொருத்துதான் கருத்துக்களுக்கு உண்டான வலு சேர்க்கப்படும், அதுபோன்ற கருத்துக்களை சொல்பவர்கள் யார் என்று சிந்தியுங்கள்.

வட சென்னையில் Co - working Space

வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னையில் இயங்கி வரும் பல்வேறு அரசு நூலகங்களை மேம்படுத்தி, பகிர்ந்த பணியிடம் (Co-working Space) மற்றும் கல்வி மையம் அமைப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு கள ஆய்வு மேற்கொண்டார்.

அந்த வகையில் எழும்பூர் தொகுதி , சூளை , இராட்லர் தெருவில் உள்ள கிளை நூலகம், திரு.வி.க. நகர் தொகுதி, புளியந்தோப்பு , வெங்கடேசபுரம் புதிய காலனி கிளை நூலகம் , இராயபுரம் தொகுதி , புதிய வண்ணாரபேட்டை , மொட்டை தோட்டம் , சிந்தனை சிற்பி சிங்காரவேலர் கிளை நூலகம் ஆர்.கே. நகர் தொகுதி, பழைய வண்ணாரப்பேட்டை, மேயர் பாசுதேவ் தெரு கிளை நூலகம் மற்றும் புதிய வண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் நூலகம், பெரம்பூர் தொகுதி, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி நூலகம், துறைமுகம் தொகுதி, ஜார்ஜ் டவுன், சண்முகம் தெரு கிளை நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்

முன்னதாக திரு.வி.க. நகர் தொகுதி, புளியந்தோப்பு, வெங்கடேசபுரம் புதிய காலனி கிளை நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு.

வடசென்னை வளர்ச்சி திட்டம் கடந்த மார்ச் மாதம் தங்க சாலையில் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது, இது வடசென்னையில் அனைவராலும் பாராட்டப்படுகிற அளவுக்கு மிக நேர்த்தியாக நடைபெற்று வரக்கூடிய திட்டமாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் துணை முதலமைச்சர் தொடர்ந்து இதுகுறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கொளத்தூர் பகுதியில் நேற்றைக்கு முதல்வர் படைப்பகம் திட்டமிட்டு தொடங்கப்பட்டது, இந்த ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் சென்னை மாநகரத்திற்குட்பட்ட 10 இடங்களில் சுமார் 20 கோடி ரூபாய் செலவு படிப்பதற்கும் பணியிட பகிர்வு மையமாக 30 கோடி ரூபாய் செலவில் 50 கோடி ரூபாயில் பத்து நூலகங்களுக்கு உண்டான இடங்களில் நூலகத்தின் தரத்தையும் படிக்கின்ற பகிர்ந்து பணியிடத்தையும் ஏற்படுத்தி தருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

வட சென்னையில் திருவிக நகர் தொகுதி, எழும்பூர் தொகுதி, துறைமுகம் மற்றும் ஆர்கே நகர் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கோடு இன்று 6 இடங்களில்  நூலகங்களை ஆய்வு செய்து நூலகங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவும், பல ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்துவதற்கு வசதி குறைவான நூலகங்களை இடித்த புதிய நூலகம் கட்டுவதற்கு இன்றைக்கு  ஆய்வினை மேற்கொண்டோம்.

ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம் என்று அனைத்து நூலகங்களையும் டிசம்பர் 25ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டு இருக்கிறது, மக்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கும் கல்வி முன்னேற்றத்திற்கும் அதிக கவனம் செலுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்ட நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த மாத இறுதிக்குள் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் மக்களுடைய பயன்பாட்டிற்கு வரும், அந்த பேருந்து நிலையத்தில் 120 பேருந்துகள் நின்று சொல்லக்கூடிய வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, ஓட்டுனர்கள் நடத்துனர்கள் தங்குவதற்கான இடங்கள், கழிப்பிட வசதிகள், உணவகங்கள், பாதுகாப்பான குடிநீர் என பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டிருக்கிறது, ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் வரப்பிரசாதமாக இப் பேருந்து நிலையம் அமையும்.

வசை பாடுபவர்களை பற்றி எங்களுக்கு கவலை கிடையாது, மக்கள் நலனுக்கு எவை உகந்ததோ அதை செய்து கொண்டிருக்கிறோம், இந்த ஆட்சி வசைப்பாடுகளை பற்றி கவலைப்படாது, வசை பாடுபவர்களும் வாழ்த்துகின்ற அளவிற்கு எங்களுடைய மக்கள் பணி முதல்வர் அவர்களால் நடந்து கொண்டிருக்கிறது.

தஞ்சாவூருக்கு 7-ம் தேதி வரும் உதயநிதியை வரவேற்க கோயில் பணம் செலவிடப்படுகிறது என்ற எச்.ராஜா வின் கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர்...

எச்.ராஜா காலையில் எழுந்தால் இரவு வரை சிந்திப்பதே என்னவென்றால் இந்த ஆட்சியின் மீது பொல்லாங்கு பேசுவதையே வாழ்க்கையாக கொண்டுள்ளார், ஏதாவது ஒரு இடத்தில் அவரை நிரூபிக்க செல்லுங்கள், அப்படி ஏதாவது நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம், எச்.ராஜா கூறுவது அபத்தமானது ஆட்சியின் மீது குறை சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற காரணத்தினால் இது போன்ற குறைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பொய் சொல்வது புகார் சொல்வது தான் எச்.ராஜாவின் வாடிக்கை. அதனால் தான் அவரை தமிழ்நாட்டின் பாஜக  பொறுப்பாளராக வைத்துள்ளனர்..

சொல்லுகின்ற ஆளைப் பொருத்துதான் கருத்துக்களுக்கு உண்டான வலு சேர்க்கப்படும், அதுபோன்ற கருத்துக்களை சொல்பவர்கள் யார் என்று சிந்தியுங்கள், நீரோட்டத்தில் அடித்து செல்பவர்கள், பெருமழை பெய்தால் எப்படி குப்பை அடித்து செல்லுமோ அதற்கு உண்டான தகுதி உடையவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி கொண்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார்.

உடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget