மேலும் அறிய

2026 சட்ட மன்ற தேர்தல் ; மேயர் பிரியாவின் MLA ஆசை !! ஓட்டு சேகரிப்பு பணிகள் துவக்கம் ?

சென்னையில் 10 க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் , தங்களுக்கும் எம்.எல்.ஏ சீட் வேண்டும் என தங்களின் ஆசையை வெளிபடுத்தி உள்ளனர்.

நானா - நீயா போட்டியில் உட்கட்சி நிர்வாகிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளை கட்சியின் தலைமை மற்றும் நிர்வாகிகள் எடுத்து வருகின்றனர். கட்சியின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நிர்வாகிகள் ஆர்வம் காண்பித்து வருவதால் , நானா , நீயா என்ன போட்டி நிலவுகிறது. உட்கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி இதற்கான முடிவுகளை விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தோர் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். இதற்கிடையே கடந்த தேர்தல்களில் எம்.எல்.ஏ. வேட்பாளர்களாக நின்று தோற்றவர்கள் பலர் , கவுன்சிலர்களாக உள்ளனர். வரும் தேர்தல்களில் அவர்கள் எம்.எல்.ஏ.,வுக்கு போட்டியிட தயாராகி வருகின்றனர்.

" கவுன்சிலர்களின் எம்.எல்.ஏ ஆசை "

தி.மு.க வை பொறுத்தவரை, வடக்கு சென்னையில் அமைச்சர் சேகர்பாபு, தென் சென்னையில் சுப்பிரமணியன் ஆகியோர் செல்வாக்கு படைத்தவர்களாக உள்ளனர். இதனால் இவர்கள் இருவரிடமும் அந்தந்த பகுதி கவுன்சிலர்கள், தங்களின் எம்.எல்.ஏ., ஆசை குறித்த விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

மேலும் விருப்பமான இரண்டு தொகுதிகள் பட்டியலையும் அளித்துள்ளனர். எம்.எல்.ஏ., வேட்பாளர் சீட்டு வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளதால் அமைச்சர்கள் வீடுகளில் தினமும் சென்று, கவுன்சிலர்கள் தவம் கிடக்கின்றனர். அதே போல் அ.தி.மு.க., கவுன்சிலர்களும் எம்.எல்.ஏ.,வுக்கு போட்டியிட, அவர்களின் மாவட்ட செயலர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து, தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரு.வி.க., நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து , அத்தொகுதியில் ஓட்டு சேகரிப்பு பணியை தற்போதே துவக்கி இருக்கிறார்.

துணை மேயர் மகேஷ்குமார், வேளச்சேரி மற்றும் சைதாப்பேட்டை ஆகிய இரண்டில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், 10 - க்கும் மேற்பட்ட தி.மு.க., கவுன்சிலர்கள், தங்களுக்கும் எம்.எல்.ஏ., சீட் வேண்டும் என அமைச்சர்கள் வீடுகளில் தவம் கிடக்கின்றனர். இவர்களில் குறைந்தது, ஐந்து பேருக்கு எம்.எல்.ஏ.,வுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் கூறினர்.

தலைப்பு செய்திகள்

சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget