மேலும் அறிய
Advertisement
பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு - 4 நாட்களுக்கு ஒரு டி.எம்.சி நீர் கடலில் கலந்து வீணாகும் நிலை
’’பாலாற்றின் குறுக்கே 7 தடுப்பணை அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில் இதுவரை நான்கு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.’’
தமிழகத்தில் அதிகளவு மழை பெய்யக்கூடிய தரக்கூடிய வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் அணையில் இருந்து வரும் தண்ணீர், காஞ்சிபுரம் பாலாற்றில் கூடுதலாக வருவதால், ஏரிகளை நிரப்பும் பணி நடக்கிறது.
பாலாற்றில் தண்ணீர் செல்லும் காரணத்தினால் துாசி, மாமண்டூர் ஏரி, தாமல் ஏரி, கோவிந்தவாடி ஏரி, நிரம்பியுள்ளன. மேலும் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கம்ப கால்வாய் வழியாக பல ஏரிகள் நிரப்பப்படுகின்றன. கம்பம் கால்வாய் வழியாக நீர் சென்றால் சுமார் 80க்கும் மேற்பட்ட ஏரிகள் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிரம்பும் . கம்பம் கால்வாய் மூலம் ஸ்ரீபெரும்புதூர் ஏரி நிரம்பி வழியும் பட்சத்தில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும், இதனால் செம்பரம்பாக்கம் ஏரியும் விரைவாக நிரம்ப வாய்ப்புள்ளது.
இந்த கால்வாய்களுக்கு போதிய அளவு தண்ணீர் சென்ற பின்பும், பாலாற்றில் வெள்ளம் போல் தண்ணீர் ஓடுகிறது. இதனால், பாலாற்றின் பழையசீவரம் அருகில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஈசூர் - வல்லிபுரம் தடுப்பணை மற்றும் கல்பாக்கம் அருகில் உள்ள வாயலுார் தடுப்பணை ஆகியவற்றில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. தடுப்பணைகள் முழுதுமாக நிரம்பியதால், 5 கிலோமீட்டர் வரை பாலாற்றில் தண்ணீர் தேங்கி நிற்பதை, விவசாயிகள் மகிழ்ச்சியோடு பார்க்கின்றனர். அதே சமயம், வாயலுார் தடுப்பணையில் இருந்து வெளியேறும் வெள்ள நீர், வினாடிக்கு 2,600 கன அடி பாலாற்றில் இருந்து கடலில் கலக்கிறது. வினாடிக்கு 2,600 கன அடி நீர் என்றால், ஒரு நாளைக்கு 220 மில்லியன் கன அடி நீர் கடலில் கலக்கிறது. நான்கு நாட்களுக்கு 1 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கும்.
நான்கு நாட்களுக்கு கடலில் கலக்கும் தண்ணீரைக் கொண்டு, காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய ஏரியான தென்னேரி போன்ற பெரிய ஏரியை நிரப்ப முடியும். காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் மூன்று தடுப்பணைகள் மட்டுமே உள்ளன. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் 7 தடுப்பணை அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். மேலும் 4 தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை நான்கு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
விவசாயிகள் கோரிக்கை
பல வருட கோரிக்கைக்கு பிறகு தற்பொழுது பாலாற்றில் தடுப்பணை கட்டி இருப்பது மிக மகிழ்ச்சியான விஷயம். கடந்த இரண்டு வருடங்களாக பாலாற்று தடுப்பணையில் தண்ணீர் தேங்கி விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது. அரசு பாலாற்றில் பத்து கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டுவதற்கு பரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல் தற்போது கட்டியுள்ள தடுப்பணைகளின் நீர்பிடிப்பு கொள்ளளவை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பாலாற்றில் அறிவித்த நான்கு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion