மேலும் அறிய
Advertisement
காமராஜரின் டாக்குமென்ட்ரி ஓவியம்..! அசத்திய காஞ்சிபுரம் இளைஞர்..! பாக்கவே செமையா இருக்கு..!
தமிழக எல்லை வரைபடத்துக்குள் காமராஜரின் 30-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை அவரது 121 வது பிறந்த நாளையொட்டி வரைந்து காஞ்சி ஓவியர் சங்கர் அசத்தி உள்ளார்
தமிழக எல்லை வரைபடத்துக்குள் காமராஜரின் 30-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை அவரது 121 வது பிறந்த நாளையொட்டி வரைந்து காஞ்சி ஓவியர் சங்கர் அசத்தி உள்ளார்
காஞ்சிபுரம் ஓவியர் சங்கர்
காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் அண்ணா அவென்யு பகுதியை சேர்ந்தவர் ஓவியர் சங்கர். இவர் மினியேச்சர் எனக் கூறப்படும் குறைந்த அளவில் பல அசாத்திய ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தியும் பல்வேறு பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ஓவியக் கலையை கற்றும் தந்து தருகிறார். இந்நிலையில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும், கல்வி தந்தை என கூறப்படும் கர்ம வீரர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா ஜூலை 15 ல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இளமைக்காலம் முதல் இறுதி காலம் வரை
இதற்கிடையில் ஓவியர் சங்கர் கர்மவீரர் காமராஜரின் இளமைக்காலம் முதல் இறுதி காலம் வரை அவருடைய வரலாற்று நிகழ்வுகளான கல்வி, அரசியல் மற்றும் நலத்திட்டம் உள்ளிட்டவைகளை தமிழக வரைபட எல்லைக்குள் அழகாக ஓவியங்களாக வரைந்து பார்ப்போர் அசரும் வகையில் அசத்தி உள்ளார். குறிப்பாக அவரது அமைச்சரவையில் இடம் பெற்ற உறுப்பினர்களுடான புகைப்படம், மதிய உணவு திட்டம், அணைகள், எலிசபெத் ராணி, அன்னை இந்திரா காந்தி உடன் சந்திப்பு என அனைத்தும் பார்ப்போரை நெகிழ செய்கிறது.
இதுகுறித்து ஓவியர் சங்கர் கூறுகையில், வளரிளம் பருவத்தில் உள்ள மாணவர்கள் எளிதில் காமராஜரின் புகழை அறிந்து கொள்ளும் வகையில் இந்த ஓவியங்களை வரைந்து உள்ளதாகவும் இதுபோன்று பல்வேறு தலைவர்களின் பிறந்த நாட்களில் அவர்களின் சாதனைகளை அறிந்து கொள்ளும் வகையில் ஓவியங்களாக திட்டமிட்டுள்ளதாகும் தெரிவித்தார்.
ஆவண ஓவியங்களை வரைந்து வருகிறேன்
சமீப காலமாக நிறைய ஆவண ஓவியங்களை வரைந்து வருகிறேன். சமீபத்தில் 108 சிவதாண்டவங்களை ஒரே, பேப்பரில் வரைந்து இருந்தேன். தனித்தனியாக அதன் ஓவியங்கள் இருக்குமானால் தற்பொழுது ஒரே பேப்பரில் நான் செய்திருந்தேன். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வைகாசி பிரம்மோற்சவ விழாவில் 10 நாள் திருவிழாவையும் ஆவண ஓவியமாக வரைந்து வைத்திருந்தேன் அதேபோல உலகத்தில் சிறிய ஓவியங்களையும் வரைந்து வருகின்றேன்.
அந்த வகையில் காமராஜரின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி முக்கிய நிகழ்வுகளை தொகுத்து ஓவியமாக வரைந்து இருக்கிறேன். அவருடைய இளம் வயதிலிருந்து, இளம் இறுதி காலம் வரை ஓவியமாக வரைந்து இருக்கிறேன் அவருடைய ஆட்சிக்காலத்தில் நடந்த சாதனைகள் ஆகியவற்றை ஓவியமாக வரைந்து இருக்கிறேன் இதனை பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மிக எளிமையாக இந்த ஓவியம் அவர்களுக்கு புரியும்படி இருக்கும். தொடர்ந்து இது போன்ற ஓவியங்களை கண்காட்சி படுத்தவும் திட்டம் தீட்டி வருகின்றேன் என தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion