மேலும் அறிய

காஞ்சிபுரம்: அதிகரிக்கும் பிளாஸ்டிக்: அபராதத்திற்கு டிஜிட்டல் முறையை கையில் எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு

தமிழகம் முழுவதுமே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தமிழக அரசு தடை செய்துள்ளதுள்ள நிலையிலும் மறைமுகமாக பல இடங்களில் இந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதனைத் தடுப்பதற்காக அவ்வப்பொழுது  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டும்,பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்தும் அபராதம் விதித்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம்: அதிகரிக்கும் பிளாஸ்டிக்: அபராதத்திற்கு டிஜிட்டல் முறையை கையில் எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம்
 
இந்நிலையில் கோவில் நகரமானதும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கின்ற  காஞ்சிபுரம் மாநகராட்சியை பிளாஸ்டிக் இல்லா மாநகரமாக முழுமையாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் தான் காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்து வந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தரம் உயர்த்தப்பட்டதிலிருந்து மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி உத்தரவின்படியும், காஞ்சிபுரம். மாநகராட்சி ஆணையர் கண்ணன் அறிவுறுத்தலின் பேரிலும், மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ் குமார், குமார், முகமது இக்பால், லட்சுமி பிரியா உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் இன்று காஞ்சிபுரம்  மாநகராட்சிக்குட்பட்ட பூக்கடைசத்திரம், செங்கழுநீரோடை வீதி,மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள பூக்கடைகள், சாலையோர கடைகள், மளிகை கடைகளில்  என பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த திடீர் ஆய்வை  மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம்: அதிகரிக்கும் பிளாஸ்டிக்: அபராதத்திற்கு டிஜிட்டல் முறையை கையில் எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம்
 
இந்த ஆய்வின் போது  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய சுமார் 75 கிலோ பிளால்டிக் பைகளை பறிமுதல் செய்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக சுமார் 11,000 ரூபாய் அபராதத்தையும் விதித்தனர். இந்த அபராதம் விதிப்பை வழக்கம் போல் கைகளால் எழுதி கொடுக்கும் சீட்டு முறையை தவிர்த்து டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கும் முறையினை பின்பற்றி கையடக்க டிஜிட்டல் இயந்திரம் மூலம் அபராதம் சீட்டினை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் வழங்கினர்.
 
இதனால் அபராதம் வசூலிக்கும் தொகையில் எவ்விதமாக தவறுகளும் ஏற்படாமல் வெளிப்படை தன்மையாக இருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

காஞ்சிபுரம்: அதிகரிக்கும் பிளாஸ்டிக்: அபராதத்திற்கு டிஜிட்டல் முறையை கையில் எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம்
 
மேலும் கடை உரிமையாளர்களிடம் இனி வருங்காலங்களில் எப்போதும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமென்றும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கையும் விடுத்தனர்.
 
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
ஆவின் பால் தரத்திற்கு புதிய மாடல்! மாதவரத்தில் முதல்வர் விஜய் திறந்து வைத்த ஆய்வகம்!
ஆவின் பால் தரத்திற்கு புதிய மாடல்! மாதவரத்தில் முதல்வர் விஜய் திறந்து வைத்த ஆய்வகம்!
திருவொற்றியூரில் 6 வயது சிறுமிக்கு கொடூரம்... குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வேண்டும் – அன்புமணி ஆவேசம்
திருவொற்றியூரில் 6 வயது சிறுமிக்கு கொடூரம்... குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வேண்டும் – அன்புமணி ஆவேசம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Jaguar Type 01 EV Car: மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
Tata Avinya X Launch: லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?

Embed widget