திருமாவளவன் ஏன் இந்த விஷயத்தை வெளிப்படையாக பேசவில்லை - ஜெயக்குமார் கேள்வி
தமிழகத்தில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, இதைப் பற்றி திருமாவளவன் ஏன் வெளிப்படையாக பேசவில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

புதிய கட்டிடம் திறப்பு
சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா மாளிகையை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தங்கும் இடம் , அதிமுக அலுவலகம் டெல்லியில் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு கழகப் பொதுச் செயலாளர் இன்று திறக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.
அத்திக்கடவு அவினாசி திட்டம் என்பது இதய தெய்வம் புரட்சித்தாய் அம்மா அவர்களால் கொண்டு வரப்பட்டது அவர்கள் இருந்த போது திட்டத்தை காண அரசாணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்காக திட்டங்களை செயல்படுத்தியவர் செயலாளர் புரட்சி தமிழர் என தெரிவித்தார்.
அந்தத் திட்டத்துக்காக ஏன் 80 சதவீதம் பணியினை முடித்தவரும் புரட்சித் தமிழர் எடப்பாடி யார் அதற்குப் பிறகு வந்த ஆளும் ஸ்டாலினின் மாடல் அரசு வேண்டும் என்று மூன்று வருடங்கள் கிடப்பில் போட்டு மெத்தனமாக இத்திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்கள் விரைந்து முடித்தால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்பதற்காக காலம் தாழ்த்தி திட்டத்தை முடித்ததாக திமுகவை விமர்சனம் செய்தார்.
மத்திய பட்ஜெட்டில் ஏழை எளிய மக்கள் , விவசாயிகளுக்கு பட்ஜெட் எதுவும் இல்லை , தமிழகத்திற்கும் ஒன்றும் இல்லை திருக்குறள் எல்லாம் படித்தார்கள் ஆனால் தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் ஏதும் ஒதுக்கப்படவில்லை. மாநில உரிமையை காப்போம் என திமுக பேசி வருகிறார்கள் ஏன் மத்திய அரசிடம் மாநில உரிமையை காப்பாற்றவில்லை அவர்கள் எப்போதும் மாநில உரிமைக்காக பேசுவது இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஸ்டாலின் மாடல் அரசு பொருத்தவரை நாட்டு மக்கள் எப்படி போனால் என்ன , தான் நல்லா இருக்க வேண்டும் நினைக்கக் கூடியவர்கள் தான் ஸ்டாலின் மாடல் அரசு.
கோகுல் இந்திரா பேசிய கருத்திற்கு பதிலளித்த ஜெயக்குமார் ;
அதிமுக தொண்டர்களே தெரிவித்த கருத்து சில பத்திரிகைகளில் வந்துள்ளது அதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. மறைமுக கூட்டணி வைக்க அவசியம் இல்லை வெட்டு ஒன்னு துண்டு 2 தான். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாடு தொடரும்.
இயக்கம் திசை மாறி செல்கிறது
தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என திருமாவளவன் வெளிப்படையாக சொல்லவில்லை. தலித்களுக்காக இருந்த இயக்கம் திசை மாறி செல்கிறது. திருமாவளவன் பேசிய ரகசிய கூட்டணி மறைமுக கூட்டணி என்று கூறி இருந்த நிலையில் எங்களைப் பொறுத்தவரை அது போல் இல்லை.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதன்மை மாநிலம் என்றால் இந்தியாவிலேயே முதலிடம் தமிழ்நாடு. ஈரோடு இடைத் தேர்தல் என்பது நாமினேஷன் தேர்தல். தேர்தல் என்பது அதிமுக கலந்து கொண்டால் தான் அது தேர்தல் , இல்லையென்றால் அது தேர்தலை இல்லை என சாடினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

