மேலும் அறிய

சென்னை: தனியார் மருத்துவமனையில் 2 கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

செக் குடியரசு நாட்டின் மருத்துவ மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் மாற்று அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஜிரி ஃப்ரோனெக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 2 கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை என்பது கர்ப்பப்பை வளர்ச்சியடையாத நிலை அல்லது இல்லாத நிலையில் (ஹைப்போபிளாசியா) உள்ள இளம்பெண்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சென்னையை சேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனையில், மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர்.

சென்னை: தனியார் மருத்துவமனையில் 2 கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

16 மணி நேரம் சிகிச்சை நடைபெற்றது

மருத்துவமனையின் மகப்பேறியல், மகப்பேறு மருத்துவம் மற்றும் கருத்தரிப்பு மருத்துவ துறையின் தலைவர் டாக்டர் பத்மப்ரியா விவேக் கூறுகையில், “எங்கள் மருத்துவமனையில் சவாலான வகையில் இரண்டு பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர் ஜிரி ஃப்ரோனெக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மூலம் மேற்கொண்டோம். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு 16 மணி நேரம் சிகிச்சை நடைபெற்றது. முன்னதாக கர்ப்பப்பை தானமாக வழங்கிய அவரது தாயின் ரத்த வகை பொருந்தவில்லை என்பதால், பிளாஸ்மா பரிமாற்றம் செய்யப்பட்டது.  மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னதாக 3 நாள்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அதேபோல ஆந்திராவைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு 15 மணி நேரம் திறந்தநிலை கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் கர்ப்பப்பை தானம் அளிக்கும் அவரது  தாயிடம் இருந்து கர்ப்பப்பையை மீட்க 8 மணி நேரமானது” என்றார்.

சென்னை: தனியார் மருத்துவமனையில் 2 கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

நம்பிக்கையை விதைக்கிறது

செக் குடியரசு நாட்டின் மருத்துவ மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் மாற்று அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஜிரி ஃப்ரோனெக் கூறுகையில், “கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை என்பது கருவுறாத பெண்களுக்கு நம்பிக்கையை விதைக்கிறது. பிறவியில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யக்கூடியது. கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் இளம்பெண்கள் தங்களின் தாய்மைப் பேறை அடைய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இந்தியாவைப் பொருத்தவரை கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை நடைமுறை ஆரம்ப நிலையில் தான் உள்ளது. மேலும் பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம்  மருத்துவக் குழுவினர் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை நடைமுறையை நிச்சயம் நெறிமுறைப்படுத்துவார்கள்” என்றார்.

சென்னை: தனியார் மருத்துவமனையில் 2 கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை நடைமுறையை செக் குடியரசு நாட்டின் டாக்டர் ஜிரி ஃப்ரோனெக் தலைமையில் மகப்பேறியல், மகப்பேறு மருத்துவம் மற்றும் கருத்தரிப்பு மருத்துவ துறையின் தலைவர் டாக்டர் பத்மப்ரியா விவேக், கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இயக்குநர் டாக்டர் ஜாய் வர்கீஸ், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இயக்குநர் டாக்டர் மேட்டு சீனிவாஸ் ரெட்டி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவம் மற்றும் எச்.பி.பி. அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் ரஜனிகாந்த் பாட்சா, எச்.பி.பி. மயக்க மருந்தியல் துறை பிரிவு தலைவர் டாக்டர் செல்வகுமார் மல்லேஸ்வரன், சிறுநீரகவியல் முதுநிலை ஆலோசகர்  மற்றும் மாற்று அறுவை சிகிச்சை டாக்டர் பி.முத்துகுமார், ரத்தகசிவு  தடுப்பு முதுநிலை ஆலோசகர் டாக்டர் பொன்னி சிவபிரகாசம் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் செய்தனர்.

சென்னை: தனியார் மருத்துவமனையில் 2 கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை
மருத்துவமனை கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இயக்குநர் டாக்டர் ஜாய் வர்கீஸ் கூறுகையில்,  “மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் புதிய நவீனத்துவ மருத்துவம் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையாகும். தமிழ்நாட்டை சேர்ந்த நோயாளிக்கு ரத்த வகை பொருந்தாத காரணத்தால் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதல் முறையாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை நடைமுறையை தொடங்கியுள்ளோம்  என்றார். மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் அலோக் குல்லர் கூறுகையில், நாட்டில் உள்ள 5 ஆயிரம் பெண்களில், ஒரு பெண் கர்ப்பப்பை சார்ந்த குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகிறார். கிளனிகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடியாக விளங்குகிறது. தாய்மைப்பேறு நம்பிக்கையை இழந்த ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இந்த சிகிச்சை முறை புதியதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
 
தலைப்பு செய்திகள்

இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Property Tax: சென்னையில் வரி உயர்ந்ததா? இல்லையா? உண்மையில் நடப்பது என்ன? ஏமாற்றுவது யார்?
சென்னையில் வரி உயர்ந்ததா? இல்லையா? உண்மையில் நடப்பது என்ன? ஏமாற்றுவது யார்?
டிராஃபிக்கிற்கு குட்பை! பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ': மாஸ் பிளான்! டெண்டர் அறிவிப்பு!
டிராஃபிக்கிற்கு குட்பை! பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ': மாஸ் பிளான்! டெண்டர் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!

Embed widget