மேலும் அறிய

திருமணத்தை மீறிய உறவு ; எனக்கே துரோகம் செய்கிறாயா ? மது போதையில் கணவன் !! மனைவி செய்த சம்பவம்

ஓசூரில் மனைவியின் திருமணத்தை மீறிய உறவை தட்டி கேட்ட கணவனை கொன்ற மனைவி

திருமணத்திற்கு மீறிய உறவு

ஓசூர் தேர் பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் பார்த்திபன் ) வயது 32 ). இவரது மனைவி அம்சவள்ளி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பார்த்திபன் ஓசூர் உழவர் சந்தையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

அம்சவள்ளி சென்ட்ரிங் போடும் கட்டட கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கட்டட வேலை செய்யும் இடத்தில் அம்சவள்ளிக்கும் அசாம் மாநிலத்தை சேர்ந்த கரண் தாஸ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகரித்து அது காதலாக மாறியுள்ளது. இது காலப் போக்கில் திருமணத்தை மீறிய உறவாக மாற ,  இந்த உறவு பார்த்திபனுக்கு தெரியவர அவர் அதிர்ச்சியடைந்து உள்ளார்.

எனக்கே துரோகம் செய்கிறாயா ?

இது தொடர்பாக மனைவி அம்சவள்ளியை அவர் கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களது பழக்கம் தொடரவே கணவன் மனைவிக்கு இடையே தினந்தோறும் வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறு காரணமாக பார்த்திபன் தினந்தோறும் மூச்சு முட்ட குடித்து விட்டு வீட்டிற்கு வர ஆரம்பித்தார். போதையில் வீட்டுக்கு வரும் அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் சம்பவத்தன்று பார்த்திபன் கழுத்து வரை குடித்து விட்டு வீட்டிற்கு தள்ளாடியபடி வந்துள்ளார். வந்ததும் வராததுமாக, எனக்கே துரோகம் செய்கிறாயா ? எனக் கூறியவாறு மனைவியை சரமாரியாகத் தாக்கி அடித்து உதைத்துள்ளார்.

போதை தலைக்கேறிய நிலையில் , அவரால் ஒரு கட்டத்திற்க மேல் மனைவியை அடிக்க முடியாமல் சரிந்து விழுந்துள்ளார். தினமும் இதே டார்ச்சராக போய் விட்டதே என விரக்தியடைந்த அம்சவள்ளி, கணவனுக்கு இன்று ஒரு முடிவு கட்டி விட வேண்டும் என ஆவேசத்துடன் எழுந்துள்ளார்.

கொலை செய்த மனைவி

தனது இளைய மகன் வீட்டில் இருந்த போது மகன் கண் முன்னாலேயே கணவன் பார்த்திபனை அடித்து உதைத்து காலால் கழுத்தை மிதித்துள்ளார். கடும் போதையில் இருந்ததால் பார்த்திபனால் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. பிறகு தான் அணிந்திருந்த புடவையால் அவரது கழுத்தை நெரித்து இறுக்கியிருக்கிறார். இதனால் மூச்சு விட முடியாமல் துடிதுடித்த பார்த்திபன் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பார்த்திபன் வீட்டில் தூக்கு போட்டு உயிரிழந்து விட்டதாக அவரது அண்ணன் விநாயகமூர்த்தி என்பவருக்கு அம்சவள்ளி தகவல் கொடுத்துள்ளார்.

சந்தேகமடைந்த அண்ணன்

பதறிப்போன விநாயகமூர்த்தி உடனே அங்கு சென்று பார்த்திபனின் உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். தூக்கு போட்டு இறந்திருந்தால் கழுத்தில் கயிறு இருக்கிய காயங்கள் இருக்கும், ஆனால் பெரிதாக எந்தவித காயங்களும் கழுத்து பகுதியில் இல்லாததால் சந்தேகமடைந்த விநாயகமூர்த்தி ஓசூர் நகர காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

போலீசாரின் கிடுக்குபிடி விசாரணை

அதன் பேரில் விசாரணையைத் தொடங்கிய போலீசார் மனைவி அம்சவள்ளியைப் பிடித்து விசாரணை நடத்தினர். முதலில் ஏதேதோ சொல்லி சமாளிக்க முயன்வர் போலீசாரின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் உண்மையை மறைக்க முடியாமல் கடைசியில் ஒப்புக் கொண்டார்.

அம்சவள்ளியை கைது செய்த போலீசார், இந்த கொலை தொடர்பாக காதலன் கரண் தாஸிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் திருமணத்தை மீறிய உறவை தட்டிக் கேட்ட கணவனை புடவையால் கழுத்தை நெரித்து மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget