மேலும் அறிய

Hostel Admission: செங்கல்பட்டு மாவட்ட மாணவர்களே..அரசு விடுதியில் தங்கிப் படிக்க விருப்பமா ? உங்களுக்குதான் இது

2023-2024-ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் மாணவர் சேர்க்கை.

செங்கல்பட்டு (Chengalpattu) : செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென 16 ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதிகள், 09 பள்ளி மாணவியர் விடுதிகள், 01 கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 04 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்/மாணவியர்களும், கல்லூரி விடுதியில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள், சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் அனைத்து விடுதி மாணவ / மாணவியர்களுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகளும், பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும்.

தகுதி மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

  • ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாணாக்கர் இணைய வழியில் (Online) https://tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் ஏற்கனவே விடுதியில் தங்கி பயிலும் மாணாக்கர் புதுப்பித்தல் விண்ணப்பத்தினை (Renewal) இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • இணைய வழியில் விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம், அவ்வாறு நேரடியாக பெறப்படும் விண்ணப்பங்களை சிறப்பினமாக கருதி, அவ்விடுதியில் அனுமதிக்கப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கையில் காலிப்பணியிடம் இருக்கும் பட்சத்தில், அவர்களையும் விடுதியில் தங்கி கல்வி பயில இருக்கும் பட்சத்தில், தேர்வு குழுவின் ஒப்புதல் பெற்று அனுமதிக்கப்படும்.
  • 4-ஆம் வகுப்பு முதல் கல்லுhரி வரை பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்(85%), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணாக்கர் (10%), பிற வகுப்பினர் (5%) என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படும்.
  • பள்ளிக்கும் வீட்டிற்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும், மாணவியருக்கும், பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் மேற்படி நிபந்தனை பொருந்தாது.
  • பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • விடுதியில் தங்கி கல்வி பயில தெரிவு செய்யப்படும் மாணாக்கர் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் விடுதியில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினாலோ அல்லது விடுதிக் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டாலோ அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அதற்குண்டான கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் உறுதி மொழிப் பத்திரம் அளிக்கப்பட வேண்டும்.
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணாக்கருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லுhரிகளில் கல்வி பயிலும் மாணாக்கர் இல்லாத நிலையில் அனுமதிக்கப்பட்ட மாணாக்கரின் எண்ணிக்கையில் காலியிடம் இருக்கும் நேர்வில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுhரியில் பயிலும் மாணாக்கரையும் சேர்த்தக்கொள்ளப்படும்.

  • ள்ளி விடுதியின் சேர்க்கை நாள்:

             விண்ணப்ப பதிவு துவங்கும் நாள்          :  07.06.2023

               முடிவடையும் நாள்                               :  30.06.2023

எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்வி பயின்று வரும் மாணவ/மாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Embed widget