மேலும் அறிய

கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களாக மாறிவரும் வீட்டுத்திண்ணைகள்...!

கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. இதனை உணர்ந்த ஆசிரியர்கள் பலரும் மாணவ மாணவிகளின் வீடுகளுக்குச் சென்று பாடங்களை எடுத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது அதன்பின், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது இதனால், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத காரணத்தினால் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மீண்டும் பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு 2020 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக மீண்டும் திறந்த பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது இதன் பின் மாணவர்களுக்கு நடக்கும் ஆண்டுத்தேர்வுகள் நடத்தப்படாமலே   அனைத்து மாணவ மாணவிகளும் "ஆல்பாஸ்" என்று அறிவிக்கும் நிலை ஏற்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களாக மாறிவரும் வீட்டுத்திண்ணைகள்...!
தற்போது 2021-22 கல்வி ஆண்டு தொடங்கி 3 மாதங்கள் கடந்தும் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் மாணவ-மாணவிகள் கல்வி கற்கும் நிலையே தொடர்கிறது. கொரோனா ஊரடங்கு காரணத்தால் அரசு பள்ளி மாணவர்களால் பொருளாதார சூழ்நிலை காரணமாக  ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியவில்ல இதனால் மாணவ -மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசும் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவ மாணவிகளுக்கு பாடங்களை எடுத்து கல்வி பயில வழி செய்து வருகிறது. இவ்வாறு இருக்கும் சூழலில் மாணவர்களின் கல்வி கெட்டுவிடக்கூடாது என கடலூர் ஊராட்சி ஒன்றியம் களையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்களுக்கு கூரைவீட்டு திண்ணையில் பாடம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி அந்த பள்ளி ஆசிரியர்கள் ஊரில் உள்ள மாணவர்களை ஒன்று திரட்டி அந்த ஊரில் உள்ள ஒரு நீண்ட கூரை வீட்டு திண்ணையில் பாடம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஊரில் உள்ள மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளதாக அந்த பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் அதுமட்டுமின்றி மாணவ மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் குழுக்களை ஏற்படுத்தி சந்தேகங்களையும் மாணவ மாணவிகளின் ஆசிரியர்கள் தீர்த்து வருகின்றனர். இவ்வாறு செய்வதனால் மாணவர்களுக்கு மிகவும் பயன்படுவதாக பெற்றோர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களாக மாறிவரும் வீட்டுத்திண்ணைகள்...!

தமிழகத்தில் தொடர்ந்து கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியே உள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. இதனை உணர்ந்த ஆசிரியர்கள் பலரும் மாணவ மாணவிகளின் வீடுகளுக்குச் சென்று பாடங்களை எடுத்து வருகின்றனர். மாணவ மாணவிகளின் கற்றல் திறனை அதிகரிக்க ஆசிரியர்களின் இது போன்ற முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை. இன்னும் கொரோனா பரவல் முடிவுக்கு வராத நிலையில் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Chennai Traffic: வடசென்னை நெரிசல் குறையுமா? அதிரடியான 5 திட்டங்கள் - அடையாறு தொடங்கி வியாசர்பாடி வரை
வடசென்னை நெரிசல் குறையுமா? அதிரடியான 5 திட்டங்கள் - அடையாறு தொடங்கி வியாசர்பாடி வரை
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget