மேலும் அறிய

Chennai Rains: இது சண்டே இல்ல.. ரெயின்டே.. சென்னையில் கொளுத்தும் மழை!

Chennai Rains: சென்னையில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், சென்னைவாசிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Chennai Rains: தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் பிறந்தது முதலே சென்னையில் வழக்கத்தை விட குளிர் வாட்டி வதைத்து வந்தது. மார்கழி மாதத்தின் பிற்பாதியான ஜனவரி தொடக்கத்தில் குளிர் மிக கடுமையாக வாட்டியதால் மக்கள் அவதியுற்றனர். 

சென்னையில் திடீர் மழை:

பொங்கலுக்கு பிறகு வழக்கம்போல வெயில் அதிகமாக இருந்து வந்த நிலையில், இன்று மாலை முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அண்ணாசாலை, ராயப்பேட்டை, வடபழனி, கோடம்பாக்கம், பாரிமுனை, ராயபுரம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை கடுமையாக பெய்து வருகிறது. நேற்று மாலை லேசான தூரலாக இருந்து வந்த நிலையில், இன்று மழை அதிகளவு பெய்து வருகிறது.

மக்கள் அவதி:

இதனால், ஞாயிற்றுக்கிழமை நாட்களில் குடும்பத்துடன் வெளியில் சுற்றிப்பார்க்கச் சென்றவர்கள், தி.நகர் போன்ற இடங்களுக்கு பொருட்கள் வாங்கச் சென்றவர்கள் அவதிக்குள்ளாகினர். இதனால், சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகியது. 

தண்ணீர்:

மெட்ரோ பணிகள் நடந்து வரும் தேனாம்பேட்டை, வடபழனி போன்ற பல பகுதிகளில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகியது. வாகன ஓட்டிகள் சாலைகளில் ஊர்ந்து செல்கின்றனர். ஆங்காங்கே சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. 

10 மணி வரை:

 சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர் , திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இடங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என்று கூறியுள்ளது. மேலும், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று கூறியுள்ளது.

மழை காரணமாக ஆங்காங்கே சில இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் அதை உடனடியாக அகற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசல் ஈடுபடாமல் இருப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

குடியரசு தின கொண்டாட்டம்:

நாளை குடியரசு தின விழா நடைபெற உள்ள நிலையில், விழா நடைபெறும் இடங்களில் தண்ணீர் தேங்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை காரணமாக சென்னையில் இருந்து வெளியூர் பேருந்துகள் செல்லும் பாதையிலும், வெளியூரில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் வரும் பாதையிலும் சற்று நெரிசல் காணப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget