Chembarambakkam Lake : அடித்துப் பெய்யும் பெருமழை.. செம்பரம்பாக்கம் ஏரி நீர் அளவின் நிலவரம் என்ன?
தொடர் மழை பெய்ய தொடங்கிய பிறகு அதிக அளவு நீர் வரத்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி ஆண்டுதோறும் பெய்யும் பருவ மழையால் நிரம்பி விடும். இதனால், ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது வழக்கம். செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்துவிட்ட பட்ட நீரால் சென்னையில் அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டு சென்னை மற்றும் சென்னை புறநகரில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாகவே ஒவ்வொரு பருவமழை மற்றும் புயலால் ஏற்படும் மழையின்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் குறித்து காணலாம்.
செம்பரம்பாக்கம் நேற்று காலை ஆறு மணி நிலவரப்படி, ஏரிக்கு நீர் வரத்தானது 1747 கனடியாக உள்ளது. நீர் வெளியேற்றுமானது 150 கன வழியாக இருக்கிறது ( மெட்ரோ குடிநீருக்கு 108 கன அடி, சிப்காடுக்கு 3 கன அடி, நீர்ப்பாசனத்துக்கு 5 கன அடி)24 அடி கொள்ளளவில் 20.42 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. சுமார் 2.708 டிஎம்சி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பருவமழை தற்பொழுது பெரிய துவங்கி உள்ளதால் நீர்வரத்து இன்னும் சில நாட்களில் அதிகரிக்க துவங்கும் என தெரிவித்தனர். நீரின் வரத்தைப் பொறுத்து, ஆலோசனை செய்து நீர் திறந்து விடுவது குறித்து, முறையான அறிவிப்பு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.
வடகிழக்கு பருவ மழை
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் நல்ல மழை பெய்தது. இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் கைகொடுக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையில் நீடிக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று நிலவரப்படி. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,180 கன அடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது