மேலும் அறிய

ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும் - அமைச்சர் ரகுபதி

ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும் , மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இருவருக்கும் இடையே ஒரு தூதராக அல்லது பாலமாக தான் இருக்க வேண்டும் ஆனால் இங்கு அவர் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்

ராஜ்பவன் இன்றைக்கு அரசியல் பவனாக மாறுகிறது

சென்னை தேனாம்பேட்டை அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார்.

ஆளுநர் ரவி தான் , ஆளுநர் என்பதை மறந்து விட்டது ஒரு அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார் , ராஜ்பவன் இன்றைக்கு  அரசியல் பவனாக மாற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கமலாலயத்துக்கு போட்டியாக ராஜ்பவன் டெல்லியின் சார்பாக அரசியல் செய்து வருகிறது.

ஒரு ஆளுநராக  இந்திய அரசுக்கு மாநில அரசுக்கும் இருக்கும் உறவினை உருவாக்கும் நபராக இருக்க வேண்டும் ஆனால் நம் ஆளுநர் அந்த உரவை  எந்தெந்த வகையில் துண்டிக்க முடியுமோ அந்தந்த வகையில் அவருடைய நடவடிக்கைகள் அமைந்து இருக்கிறது.

ஆன்லைன் ரம்மி - யின் பிராண்ட் அம்பாசிடர்போல  மற்றும் நீட் தேர்வின் பி.ஆர்.வோ போல் செயல்பட்டு வருகிறார். 

காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்

காந்தி மண்டபம் வளாகத்தில் மது பாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளது. அது மிக வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார் , காந்தி மண்டபத்தில் ஆளுநர் அருந்ததி மற்றும் அவரிடம் சென்று கேமராமேன் அவர்களின் கண்களுக்கு மட்டும் மது பாட்டில்கள் தெரிந்துள்ளது. சென்னை மாநகராட்சி காந்தி மண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களில் சிறப்பான சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதிகமாக சுத்தம் செய்யும் இடமாக இருக்கும் மெரினா கடற்கரை கூட சுத்தமாக வைத்துக் கொள்ளும் அரசாங்கம் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.

வீட்டை  நாம் பாதுகாப்பாக தான் வைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் வீட்டில் ஒரு திருடன் பூந்து விட்டால் நம் வீட்டில் பாதுகாப்பு இல்லை என கூறிவிட முடியாது , ஏன் திருடன் வரும் பொழுது பாதுகாப்பு குறைவாக இருந்தது என்று கண்டறிவதை விட்டு விட்டு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்று மட்டும் கூறிக் கொண்டிருப்பதில் எந்த விதமான அர்த்தமும் கிடையாது.

காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் உள்ளது என அவருடைய மன உளைச்சலை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கும் தெரியும் காந்தியடிகள் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆனாலும் இந்திய முழுவதும் பல சூதாட்டங்கள் நடந்து கொண்டு வருகிறது.

திராவிட திமுக அரசு மதுவிலக்கு எப்போதும் ஆதரவாக உள்ள அரசு ஆனால் மது ஒழிப்பதற்கு தமிழ்நாடு அரசு மட்டும் கையில் எடுக்க முடியாது அனைத்து மாநிலங்களை ஒன்றிணைத்து ஒன்றிணைய அரசு தான் அந்த திட்டத்தை கையில் எடுக்க வேண்டும்.

எங்களுக்கு தமிழகத்தில் மது இருக்க வேண்டும் எண்ணம் எங்களுக்கு கிடையாது , ஆனால் அருகாமையில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மது இருக்கிறது. இந்திய முழுவதும் ஒரு திட்டம் செயல்பட்டால் மட்டுமே மது ஒழிப்பு நடைபெறும்.

அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது அதற்க்கு அமைச்சர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அந்த தீர்ப்பை நிறுத்தி வைத்தார் , அந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமைச்சர் பொன்முடியை மீண்டும் அமைச்சரவையில் இணைப்பதற்கு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் ஆளுநர் ஆர்.என் ரவி இழுத்தடித்தார்.

இந்தியா முழுவதும் மது ஒழிப்பு - மு.க ஸ்டாலின் முயற்சி

மற்ற மாநிலங்களில் மது ஒழிப்பு இல்லாத நிலையில் நம் மாநிலத்தில் மட்டும் மது ஒழிப்பு கொண்டு வருவது சாத்தியம் இல்லை , தமிழகத்தில் மட்டும் கொண்டு வந்தால் இங்கு கள்ளச் சாராயம் பெருகும் , இதன் காரணமாக இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் , இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா முழுவதும் மது ஒழிப்பு நடை முறை ஏற்படுத்த முயற்சி செய்வார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். 

தமிழகத்தில் அனைவரும் அண்ணன் தம்பி என்று தான் உள்ளோம் , இங்கிருக்கும் அனைவரும் தமிழர்கள் என்று உணர்வோடு தான் இருக்கிறார்கள் , ஒருவரை பார்த்தவுடன் இவர் எந்த ஜாதி என வாய் விட்டு கேட்காதே நிலையில் உள்ளார்கள் , இந்தியாவில் அமைதி பூங்கா தமிழ்நாடு தான் அனைவரையும் சகோதரத்துவம் கொண்டு பார்ப்பது தமிழகம் தான் 

தமிழகத்தில் தலித்துகள் மட்டுமே தாக்கப்படுகிறார்கள் என எந்த புள்ளி விவரமும் கிடையாது , தலித்துகளை மட்டும் தாக்க வேண்டும் என எவரும் முயற்சி செய்யவில்லை.

ஆளுநரின் அரசியலால் பிரச்சனை வருகிறது

ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும் , மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இருவருக்கும் இடையே ஒரு தூதராக அல்லது பாலமாக தான் இருக்க வேண்டும் ஆனால் இங்கு அவர் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார். அவர் அரசியல் செய்யும் காரணங்களால் தான் இங்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுவரை இந்தியாவில் இருக்கும் எந்த ஆளுநரும் ஒரு பொதுக் கூட்டம் போல் மக்களை கூட்டி பேசியதில்லை.

நாங்கள் ஆளுநர் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுகள் அவர் பதவி விலக வேண்டும் எனும் நோக்கத்துடன் மட்டுமே. 

ஆளுநர் ஆர்.என் ரவி மேகாலயா பீகார் போன்ற பல்வேறு வட மாநிலங்களுக்கு சென்று அங்கு  பணியாற்றியுள்ளார். ஆளுநர் மனசாட்சியுடன் மற்ற மாநிலங்களிலும் தமிழகத்திலும் இருக்கும் வித்தியாசத்தை  பேச தயாராக இருக்கிறாரா ?  நாங்களும் அனைத்து மாநிலங்களுக்கும் என்றெல்லாம் தமிழகத்தில் இருக்கும் சமத்துவத்துவத்தை போல் இந்தியாவில் வேரு எந்த மாநிலமும் இல்லை.

தமிழகத்தில் பூரண மது விலக்கு

தமிழகத்தில் இருக்கும்  மது கடைகள் 50 சதவீதம் மூடினாலும் அதே நிலை தான் நீடிக்கும். ஆகவே  பூரண மதுவிலக்கு  தான் மக்கள் முன்னேற்றத்திற்கு உதவும் 

தமிழகத்தில் போதைப் பொருட்கள் உற்பத்தி செய்வது யாரும் ஆதரிக்கவில்லை ,தமிழகத்தில் இருக்கும் பூதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் ஆனால் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவது கடினம் வெளிமாநிலங்களில் இருந்து வரும் போதைப்பொருட்களை நாங்கள் முடிந்தவரை தடுத்து வருகிறோம்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தொடர்ச்சியாக ரெய்டுகள் நடத்தி வருகிறோம் , சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள தடைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தலித்துகளுக்கு ஆபத்து அவர்கள் மீது வன்முறை நடைபெறுகிறது என்பது வதந்திகள் மட்டுமே , அனைவரும் அண்ணன் தம்பிகள் போல் இருக்கிறாரா எங்காவது அதைப் போன்ற சம்பவங்கள் நடந்தால் அது தடுக்கப்படும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Embed widget