மேலும் அறிய

மத்திய அரசு வேலை தேடுறீங்களா..? இலவச பயிற்சி மையம் மிஸ் பண்ணாதீங்க..

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது

அஞ்சலக துறையில் உதவியாளர் போன்ற பல பணிக்காலியிடங்கள்

மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமானவரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகாலியிடங்களுக்கு கல்வித்தகுதி பட்டதாரி (Any Degree) ஆகும். வயதுவரம்பு 01.08.2023 தேதியில் 18 முதல் 27 ஆகும். வயதுவரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு (SC/ST) 5 வருடங்கள் வயதுவரம்பில் தளர்வும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (Differently Abled) 10 வருடங்கள் வயதுவரம்பில் தளர்வு உண்டு. 

மொத்த பணிக்காலியிடங்கள் 

மொத்த பணிக்காலியிடங்கள் தோராயமாக 7,000 (இந்தியா முழுவதும்).  இப்பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2023 ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

 போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மேற்காணும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.  எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இத்தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டும், 044-27426020 என்ற தொலைபேசி எண்ணில்  28.04.2023 தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளுமாறும்,  கீழே கொடுக்கப்பட்டுள்ள QR-Code-யை ஸ்கேன் செய்து அல்லது https://forms.gle/YA2vYJ1AFjUYAd7  என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் செங்கல்பட்டு  மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ர.ராகுல்நாத் இ.ஆ.ப  தெரிவித்துள்ளார்.

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

US Captures Venezuela President: வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்தி ட்ரம்ப்; பெரும் பதற்றம்
வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்தி ட்ரம்ப்; பெரும் பதற்றம்
CM Stalin on TAPS: புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Captures Venezuela President: வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்தி ட்ரம்ப்; பெரும் பதற்றம்
வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்தி ட்ரம்ப்; பெரும் பதற்றம்
CM Stalin on TAPS: புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
TN Govt Pesnison Scheme: பழைய ஓய்வூதியம் Vs தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் - வித்தியாசம் என்ன? ஊழியர்களுக்கு ஜாக்பாட்?
TN Govt Pesnison Scheme: பழைய ஓய்வூதியம் Vs தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் - வித்தியாசம் என்ன? ஊழியர்களுக்கு ஜாக்பாட்?
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Embed widget