மேலும் அறிய

Ford | ஃபோர்டு தொழிற்சாலை முடிவு: நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினர் இன்று பேச்சுவார்த்தை...!

மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலை மூடப்பட போவதாக அறிவித்துள்ள நிலையில், இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் நீண்ட நாட்களாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. சென்னையில் மறைமலை நகர் மற்றும் குஜராத்தின் சனந்த் பகுதிகளில் அந்நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

Ford | ஃபோர்டு தொழிற்சாலை முடிவு: நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினர் இன்று பேச்சுவார்த்தை...!
இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்தியாவில் உள்ள இரு ஆலைகளையும் மூட ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 
 
மறைமலைநகர் தொழிற்சாலை
 
தற்போது,  சென்னை அடுத்துள்ள மறைமலை நகரில் இருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேறுவதால், நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் சுமார் 19 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையில், நிரந்தர பணியாளர்களாக 2650 நபர்கள் பணியாற்றி வருகிறார்கள். 400-க்கும் மேற்பட்ட பயிற்சி தொழிலாளர்களும், 700 நிர்வாகப் பணியாளர்களும், அதேபோல் நேரடி ஒப்பந்த பணியாளர்களை இரண்டாயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
Ford | ஃபோர்டு தொழிற்சாலை முடிவு: நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினர் இன்று பேச்சுவார்த்தை...!
 
இதுமட்டுமின்றி அந்த நிறுவனத்திற்கு உணவு, டீ, அடிப்படை வசதிகள் , ஓட்டுனர்கள் உள்ளிட்ட பணி செய்து தரும் மறைமுக பணியாளர்கள் 2500-க்கும் மேற்பட்ட நபர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் மூலம் சுமார் 7 ஆயிரம் பணியாளர்களின் நேரடியாக பயன்பெற்று வருகின்றனர்.

Ford | ஃபோர்டு தொழிற்சாலை முடிவு: நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினர் இன்று பேச்சுவார்த்தை...!
மேலும் இந்த நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சுமார் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் நிறுவனத்திற்கு மட்டும் பிரத்யேகமாக உதிரி பாகங்கள் தயாரிக்கும் மறைமுக ஊழியர்களாக, சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது இந்நிறுவனம் மூடப்படும் என்பதால் மறைமுக பணியாளர்களாக பணிபுரிந்து வரும், 12000 நபர்களுக்கான வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.  மொத்தம் சுமார் 19 ஆயிரம் பணியாளர்கள் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
 
இன்று பேச்சுவார்த்தை
 
தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுடன் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், நிறுவனத்தை விற்கும் பட்சத்தில் எங்களுடைய வேலையை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்க இருப்பதாக தெரிவித்தனர். மேலும் ஊழியர்களின் எதிர்காலம் குறித்து தொழிற்சாலை நிர்வாகம் முழு விவரத்தை தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
Embed widget