மேலும் அறிய

Chennai Food Street : உணவு பிரியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. சென்னைல ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ வரப்போகுது.. எங்கே எப்போன்னு தெரியுமா? முழு விவரம் இதோ..

சென்னையில் முதல் முறையாக பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பில்  ரூ.20 கோடி மதிப்பீட்டில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ (Food Street) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் முதல் முறையாக பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பில்  ரூ.20 கோடி மதிப்பீட்டில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ (Food Street) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் ஏரளமான மக்கள் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான உணவு பிடிக்கும். ஒரு சிலருக்கு இந்திய உணவுகள் பிடிக்கும், மற்றவர்களுக்கு சைனீஸ், தாய் அல்லது பிற நாட்டு உணவுகள் மீது மோகம் அதிகமாக இருக்கும். சென்னையை பொருத்தவரை அனைத்து வகை உணவுகளும் கிடைக்கிறது. உணவுப்பிரியர்களும் இங்கு அதிகம் என்றே சொல்லலாம்.

ஆனால், இந்த உணவுகள் அனைத்தும் வெவ்வேறு இடங்களில் கிடைக்கிறது. மேலும், சென்னையில் உணவுத் திருவிழாக்களை நடத்துவதற்கு சரியான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதன் காரணமாக தீவுத்திடல் போன்ற மைதானங்களில் தான் உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.  ஆண்டு தோறும் வித்தியாசமான உணவு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. பாரம்பரிய உணவு திருவிழா மக்கள் மத்தியில் அதிக  கவனம் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி சின்னமலை அருகில் ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ராஜ்பவன் சாலை வரை உள்ள 2 கி.மீ நீளச்சாலையை உணவுச் சாலையாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ரூ.20 கோடி செலவில் இந்த உணவுச் சாலை அமைக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் உள்ள அனைத்து பிரபலமான உணவு வகைகளும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்று ஒரு திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த சாலையில் இரண்டு புறமும் நடைபாதைகள் பெரிதாக அமைக்கப்படும். மேலும், அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும். பிரதானமான சாலை என்பதால் மக்கள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்ப்டுகிறது. 

இதன்பிறகு சென்னையில் பிரபலமாக உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து உணவகங்களையும் இங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் உணவு திருவிழாக்கள் நடத்த ஏற்ற இடமாக இது இருக்கும். இதற்கான தொடக்க கட்ட பணிகள் நடைபெற்றது. விரைவில் இந்த பணிகள் இறுதி செய்யப்பட்டு அடுத்த கட்ட பணிகள் தொடங்கும், 2 ஆண்டுக்குள் இந்த பணிகள் முழுமையடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும்" என்று கூறியுள்ளனர்.

வார இறுதி நாட்கள் என்றால் மக்கள் அனைவரும் குடும்பத்தினருடன் செல்லும் இடம் ஃபுட் ஸ்ட்ரீட்தான். தற்போது இருக்கும் வாழ்வியல் சூழலில் மக்கள் அனைவரும் வித்தியாசமான உணவுகளை ருசித்து பார்க்க விரும்புகின்றனர்.  சென்னையில் பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்கள் தரப்பில் பல ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ இயங்கி வருகிறது. ஆனால் முதல் முறையாக பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

Actor Vivek: “உங்கள் மறைவு மிகப்பெரிய இழப்பு” ... நடிகர் விவேக் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்..

Lassi Tips : சம்மர் தொடங்கியாச்சு.. பெஸ்ட் லஸ்ஸி வேணுமா? சூப்பர் டிப்ஸ் இங்க இருக்கு..

Oscar 2023 Gift Bag: ஆஸ்கர் நாமினிகளுக்கும் அடித்தது லக்... பரிசு பை உள்ளே என்ன இருக்கு? தெரிஞ்சுக்கலாம் வாங்க...

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget