மேலும் அறிய

மின் கோபுர வழித்தட இழப்பீடு ; விவசாயிகளுக்கு இனி அதிக நிவாரணம் ! தமிழக அரசின் அதிரடி முடிவு

அதிக திறன் உடைய மின் கோபுர வழித்தடங்கள் அமைக்க , நிலம் தருவோருக்கான இழப்பீட்டை மும்மடங்காக உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மின் கோபுர வழித்தடங்கள் அமைக்க , நிலம் தருவோருக்கான இழப்பீட்டை மும்மடங்காக உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் அனல் நீர் உள்ளிட்ட மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் , மின் கோபுர வழித்தடங்கள் வாயிலாக பல்வேறு இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. விவசாயிகள், தனியாருக்கு சொந்தமான நிலங்களில் இந்த மின் கோபுர வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.

நிலத்தின் மேல் மின் வழித்தடம் அமைக்கப்படும் போது , அதன் உரிமையாளருக்கு நிலத்தின் வழிகாட்டி மதிப்பில், 100 சதவீதமும், மேலே செல்லும் கம்பி வழித்தடத்துக்கு, 20 சதவீதமும் இழப்பீடு வழங்கப்படுகிறது. திருப்பூர், கோவை, உள்ளிட்ட பகுதிகளில் மின் கோபுர வழித்தடம் அமைக்க, அதிக இழப்பீடு கேட்டு சிலர் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மின் வழித்தடங்களை அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது ; 

அரசு நிர்ணயம் செய்துள்ள இழப்பீட்டு தொகையை ஏற்காத பட்சத்தில், மாவட்ட வருவாய் துறையினர் பேச்சு நடத்தி, அவர்கள் கேட்கும் தொகை வழங்கப்படுகிறது. தமிழக மின் தேவை அதிகரித்து வரும் சூழலில், அதற்கு ஏற்ப புதிய மின் கோபுர வழித்தட திட்டங்களை செயல் படுத்த வேண்டியுள்ளது.

மத்திய அரசின், பவர் கிரிட் நிறுவனம், மின் வழித்தடங்கள் அமைக்க, வழிகாட்டி மதிப்பை விட கூடுதல் இழப்பீடு வழங்குகிறது. இதனால், அதன் திட்டங்கள் குறித்த காலத்தில் முடிக்கப்படுகின்றன.

எனவே, புதிய மின் வழித்தடங்களை விரைவாக அமைக்க, தற்போது வழங்கப்படும் இழப்பீட்டை விட மும்மடங்கு வரை உயர்த்தி வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது என இவ்வாறு அவர் கூறினார்.

NLC புதிய மின் நிலையத்தில் தமிழகத்திற்கு 830 மெகாவாட் ஒதுக்கீடு

சுடலுார் மாவட்டம் நெய்வேலியில் என். எல்.சி., எனப்படும் நிலக்கரி நெய்வேலி நிறுவனம் அமைக்கும் புதிய அனல் மின் நிலையத்தில் இருந்து, தமிழகத்திற்கு 830 மெகா வாட் மின்சாரத்தை, மத்திய மின்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் , மத்திய அரசின் என்.எல்.சி., நிறுவனத்திற்கு 3,390 மெகா வாட் திறனில் நான்கு அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 1,730 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதி மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு தரப்படுகிறது.

நெய்வேலியில் தலா 500 மெகாவாட் திறனில், இரு அலகுகள் உடைய இரண்டாம் விரிவாக்க அனல் மின் நிலையத்தை என்.எல்.சி., நிறுவனம் அமைக்க உள்ளது. இதில், உற்பத்தி செய்யப்பட உள்ள மின்சாரத்தில், 830.44 மெகாவாட்டை தமிழகத்திற்கும், 19.56 மெகா வாட்டை புதுச்சேரிக்கும் மத்திய மின்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.

மீதமுள்ள 150 மெகா வாட் மின்சாரம் எந்த மாநிலத்திற்கும் ஒதுக்கப்படாமல் மத்திய அரசிடம் இருக்கும். இந்த மின்சாரத்தை, மின் தேவை அதிகம் உள்ள மாநிலங்களுக்கு சுழற்சி அடிப்படையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது.

தலைப்பு செய்திகள்

பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget