மேலும் அறிய

Cyclone Michaung: மோசமாகும் வானிலை.. தண்ணீரில் தத்தளிக்கும் தலைநகர்; விமானங்களைத் தொடர்ந்து புறநகர் ரயில்களும் ரத்து

புயல் காரணமாக ஏற்கனவே 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

மிக்ஜாம் புயல் கரையை நோக்கி மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் அதிகனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இதன் காரணமாக ஏற்கனவே 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த மின்சார ரயில்கள், மிகவும் மோசமான வானிலை காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஒரு மணிநேரத்திற்கு ஒரு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பெருமளவு பாதிப்பு.

6 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி அனுப்பி வைப்பு. புறப்படு விமானங்கள் 10, வருகை விமானங்கள் 10, இதுவரை 20 விமானங்கள் ரத்து. சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் 14, வருகை விமானங்கள் 12, மொத்தம் 26 விமானங்கள் பல மணி நேரம் தாமதம்.

மீனம்பாக்கத்தில் 82 கிலோ மீட்டர் வேகத்துக்கு காற்று வீசி வருவதால் காலை 10 மணி முதல்  2 மணி நேரத்திற்கு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதேநிலை தொடர்ந்தால் விமான சேவை ரத்து செய்யப்படும் நேரம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. 

இன்று சென்னைக்கு அபுதாபி 2 விமானங்கள், துபாய் 2 விமானங்கள் மற்றும் பக்ரைன், மும்பை மொத்தம் 6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. 

அதைப்போல் சென்னையில் இருந்து துபாய், இலங்கை, விஜயவாடா, ராஜமுந்திரி, கோவை, திருச்சி, கொச்சி உள்ளிட்ட 10 புறப்பாடு விமானங்கள், மற்றும் அதே இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வரும் 10 விமானங்கள், ஆகிய 20 விமானங்கள் இன்று இதுவரையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தவிர துபாய், லண்டன், சிங்கப்பூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா, உட்பட 14 புறப்பாடு விமானங்கள், லண்டன், கோலாலம்பூர், சார்ஜா, துபாய், மும்பை, டெல்லி  உள்ளிட்ட 12 வருகை விமானங்கள், மொத்தம் 26 விமானங்கள் இதுவரை பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

மிக்ஜாம் புயல் காரணமாக இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வரும் விமானங்கள் மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்படலாம், அல்லது வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படலாம், இல்லையேல் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்படலாம் என்று தெரிய வருகிறது.

இதை அடுத்து விமான பயணிகள் அனைவரும் அந்தந்த விமானம் நிறுவனங்களின், இணையதளங்களில் தொடர்பு கொண்டு விமானங்களின் புறப்பாடு வருகை குறித்து, பயணிகள் தெரிந்து கொண்டு, அதன்பின்பு விமான நிலையத்திற்கு வந்தால் போதும். மேலும் அவசியமான பயணம் என்றால் மட்டும், இன்று விமானப்பயணம் மேற்கொள்ளலாம். இல்லை என்றால், இன்று விமான பயணத்தை பயணிகள் தவிர்ப்பது நல்லது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

விமான நிலையத்தில் வேகமாக காற்று வீசி வருவதாலும் விமான ஓடுதளத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதாலும் 68 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை -  ஆட்சியர் அறிவிப்பு
மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்Kaliyammal: தவெக மேடையில் காளியம்மாள்? பதவியை அறிவிக்கும் விஜய்! வரிசை கட்டும் முக்கிய புள்ளிகள்!Delhi Assembly Fight: Kaliyammal Profile: நாதகவின் சிங்கப்பெண்! சீமானின் குலதெய்வம்! யார் இந்த காளியம்மாள்? | NTK |Seeman

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை -  ஆட்சியர் அறிவிப்பு
மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
Modi on Kisan Scheme: அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
Embed widget