மேலும் அறிய

சென்னையில் இங்கே போகாதீங்க.... கடை கண்டிப்பா இருக்காது! அடைக்க உத்தரவிட்ட பின்னணி!

சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 9 இடங்களில் வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள் திறக்க ஆகஸ்ட் 9-ந் தேதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, சென்னையிலும், கோவையிலும் கடந்த ஓரிரு தினங்களாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அதே தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், சென்னையில் சில கட்டுப்பாடுகளை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் ஆகஸ்டு 9-ந் தேதி வரை கூடுதலாக எந்த தளர்வுகளுமின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, அண்டை மாநிலங்களிலும், மாநிலத்தின் சில பகுதிகளிலும் நோய் தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இங்கே போகாதீங்க.... கடை கண்டிப்பா இருக்காது! அடைக்க உத்தரவிட்ட பின்னணி!

இதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கொரோனா தொற்று பாதகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள் 31-ந் தேதி முதல் ஆகஸ்ட் 9-ந் தேதி வரை காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை என முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்விவரம் பின்வருமாறு:

  • ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரெயில் நிலையம் வரை
  • புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் ப்ரூக்ளின் சாலை வரை
  • ஜாம்பஜார் பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை
  • பக்கிஷாஹீப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை, குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை

சென்னையில் இங்கே போகாதீங்க.... கடை கண்டிப்பா இருக்காது! அடைக்க உத்தரவிட்ட பின்னணி!

  • ராயபுரம் மார்க்கெட் பகுதிகளில் கல்மண்டபம் சாலை, வாட்டர்டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை
  • அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை
  • ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை

இந்த பகுதிகளில் உள்ள வணிகவளாங்கள் மற்றும் அங்கன்வாடிகள் ஆகஸ்டு 9-ந் தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை என்று வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை வணிகர்கள் நடைமுறைப்படுத்தி மாநகராட்சி மற்றும் காவல்துறையின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பொது இடங்களில் முககவசம் அணியாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
Embed widget