மேலும் அறிய

CM Vijay Perambur: ”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி

CM Vijay Perambur Constituency: பெரம்பூரில் 7 முக்கிய திட்டங்களை செயல்படுத்த தனது சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடியை முதலமைச்சர் விஜய் ஒதுக்கியுள்ளார்.

CM Vijay Perambur Constituency:  பெரம்பூரில் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய் பட்டியலிட்டுள்ள 7 திட்டங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

பெரம்பூருக்காக முதலமைச்சர் விஜய்

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான பிறகு, தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு முதல்முறையாக விஜய் நேற்று சென்றார். அங்கு அமைந்துள்ள தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்தார. பின்பு புதிய பயனர்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட பணிகளை மேற்கொண்டதோடு, பல்வேறு ஆய்வுப்பணிகளிலும் ஈடுபட்டார். தனது தொகுதி மக்களின் குறைகளை அறிய, மக்கள் சேவை தளம் எனும் புதிய செயலியின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்தார். இதன் மூலம் அந்த பகுதிகளில் நிலவும் பல்வேறு அடிப்படை பிரச்னைகளுக்கு தீவு காணக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பெரம்பூரில் நலத்திட்டங்களை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரனுக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் கோரிக்கை:

முதலமைச்சர்  ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதிக்கு தனது முழு எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3 கோடி மதிப்பிலான திட்டங்களை முன்மொழிந்து  சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்து திட்டங்களின் பணிகளும் உடனே தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கடிதத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கான மேம்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அனைத்துப் பணிகளும் உடனடியாகத் தொடங்கும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் பட்டியலிட்டுள்ள கோரிக்கைகள்:

  1. ரூ. 50 லட்சம் செலவில், சிசிடிவி கேமரா மற்றும் வைஃபை வசதியுடன், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட 24x7 நேரலை ஒளிபரப்புடன் கூடிய ஆறு பேருந்து நிறுத்தங்கள் அமைக்க வேண்டும். இதற்கான இடங்களாக எருக்கஞ்சேரி ஹை ரோடு, சிட்கோ நகர், எஸ்.எம். நகரில் இரண்டு இடங்கள், எம்.கே.பி. நகர் மற்றும் வியாசர்பாடி மேம்பால சந்திப்பு தேர்வு செய்யப்பட உள்ளன
  2. மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான விளையாட்டு வளாகம் கட்டப்படும்.
  3. அம்பேத்கர் கலைக் கல்லூரியில் ரூ. 25 லட்சம் செலவில் விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப்படும். புதிய விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்படுவதுடன், கூடைப்பந்து, கிரிக்கெட் மைதானம் மற்றும் கபடி மைதானமும் மேம்படுத்தப்படும்.
  4. ரூ.50 லட்சம் செலவில் சத்தியமூர்த்தி நகரில் டயாலிசிஸ் பிரிவு அமைக்க வேண்டும்
  5. எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ரூ.25 லட்சம் செலவில் தற்காலிகப் பணியாளர் ஓய்வறை.
  6. ரூ.50 லட்சம் செலவில் அம்பேத்கர் கல்லூரியில் நூலகம் மற்றும் கல்வி மையம்.
  7. ரூ.50 லட்சம் செலவி அங்கன்வாடிகளுக்குத் தேவையான உபகரணங்களைக் கொள்முதல் செய்தல். 

இதையும் படியுங்கள்:CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ மாஸ்டர் செல்ஃபி”

தொகுதி மேம்பாட்டு நிதி

தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் ரூ.3 கோடி தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியைப் பயன்படுத்தி சாலை வசதி, குடிநீர், பள்ளிக் கட்டடங்கள், தெருவிளக்குகள் போன்ற வளர்ச்சிப் பணிகளை எம்.எல்.ஏ.க்கள் பரிந்துரைக்கலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget