மேலும் அறிய

‘துப்பாக்கியால் சுடாதே; எச்சரித்த போலீசார்’ - ஏன் என்கவுன்டர் செய்தோம் - போலீஸ் விளக்கம்

ரவுடியை துரத்திச் சென்ற போலீஸ் வாகனத்தின் மீது இரண்டு முறை துப்பாக்கிச் சூடு - தற்காப்பிற்காக போலீசார் சுட்டதில் பிரபல ரவுடி உயிரிழப்பு.

வாகன சோதனையில் போலீசார் 

சென்னை கொடுங்கையூர் முல்லை நகரில் இன்று அதிகாலை காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 4.32 மணி அளவில் புதுச்சேரி பதிவு எண் கொண்ட கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது காரில் இருந்த இரண்டு நபர்களில் ஓட்டுநர் அருகில் இருக்கையில் அமர்ந்திருந்த நபரை இறக்கி விசாரித்துக் கொண்டிருந்த போது திடீரென்று அந்த காரில் இருந்த ஓட்டுநர் காரை எடுத்துக் கொண்டு அதிவேகமாக தப்பிச் சென்றுள்ளார்.

அதி வேகமாக சென்ற கார்

இந்த தகவலை அங்கு பணியில் இருந்த காவலர் நாதமுனி என்பவர் சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறையில் இருந்து உடனடியாக இந்த தகவலை சம்பந்தப்பட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு தெரிவித்துள்ளனர். அப்போது முல்லை நகர் வியாசர்பாடி மெயின் ரோட்டில் கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் அவரின் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து செய்தி கிடைத்தவுடன் அந்த வழியாக தப்பி வந்த புதுச்சேரி பதிவு எண் கொண்ட காரை அடையாளம் கண்டு நிறுத்திய போது அந்த கார் நிற்காமல் அதிவேகமாக கடந்து சென்றுள்ளது.

அதிவேகமாகச் சென்ற காரை பின் தொடர்ந்த காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் அந்த வாகனம் வியாசர்பாடியில் உள்ள  உள்ள பாழடைந்த பி.எஸ்.என்.எல் குடியிருப்பு வளாகத்தின் உள் பக்கமாக வேகமாக சென்று அதிகாலை 4.50 மணியளவில் நின்றுள்ளது.

துப்பாக்கியால் சுடாதே - எச்சரித்த போலீசார்

அப்போது காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் அவரது குழுவினர் காரை பின் தொடர்ந்து சென்று பிடிக்க முயன்ற போது அந்த காரில் இருந்து இறங்கிய நபர் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் கையில் வைத்திருந்த கை துப்பாக்கியால் காவல் ஆய்வாளர் சரவணனை நோக்கி சுட்டு உள்ளார். காரை சுட்டதில் போலீஸ் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வாளர் சரவணன் சுடாதே என்று எச்சரித்தும் அந்த நபர் அதனை கேட்காமல் இரண்டாவது முறையாக மீண்டும் சுட்டதில் போலீஸ் வாகனத்தின் இடது பக்க முன்பக்க கதவில் பட்டுள்ளது. அதன் காரணமாக காவல் ஆய்வாளர் அவர் வைத்திருந்த கை துப்பாக்கியால் தன்னையும் தன்னோடு இருந்த சக காவலர்களையும் காப்பாற்றும் நோக்கத்தில் தங்களை தற்காத்துக் கொள்ள ஒரு ரவுண்ட் அந்த நபர் மீது சுட்டு உள்ளார். உடனே அந்த நபர் இரத்த வெள்ளத்தில் விழுந்ததால் அந்த நபரின் உயிரை உடனடியாக காப்பாற்றும் பொருட்டு காவல் ஆய்வாளர் சரவணன் அவரை காவல் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதன் பிறகு விசாரணையில் அந்த காரை சோதனை செய்ததில் அதில் 10 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா மற்றும் வீச்சருவாள் இருந்தது தெரியவந்துள்ளது.விசாரணையில் இறந்த நபர் ராமலிங்கம் என்பவரின் மகன் காக்கா தோப்பு பாலாஜி என தெரியவந்தது. இவர் மீது 59 வழக்குகள் உள்ளது, அதில் ஆறு கொலை வழக்குகளும், 17 கொலை முயற்சி வழக்குகளும், ஒரு கஞ்சா வழக்கும் மற்றும் 34 இதர வழக்குகளும் உள்ளது..ஆய்வாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வியாசர்பாடி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்.

காவல்துறையினர் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, உடன் வந்தவர் சத்தியமூர்த்தி அவரை  பற்றி விசாரிக்க வேண்டும், இன்ஸ்பெக்டர் சுடும் வரை காக்கா தோப்பு பாலாஜி என்று போலீசுக்கு தெரியாது, அவர் தொலைபேசி வைத்து இல்லை. சம்போ செந்தில் தொடர்பாகவும் ஆட்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாகவும் இந்த சம்பவத்திற்கு தொடர்பில்லை, சூழ்நிலையை பொறுத்தே துப்பாக்கி சூடு நடந்தது, முன்கூட்டிய காக்கா தோப்பு பாலாஜி குறித்த கண்காணிப்பு இல்லை, துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிடுதல் இல்லை, ரவுடிகளிடம் துப்பாக்கி இருப்பது கண்காணிக்கபடும் என்றார்.

காவல்துறையினர் சோதனையில் நிற்காமல் சென்ற காரை போலீசார் துரத்திச் சென்ற பொழுது காரை ஒட்டிச்சென்ற நபர் இரண்டு முறை காவல்துறையினரை துப்பாக்கியால் சுட முயன்றதால் தற்காப்பிற்காக காவல்துறையினர் சுட்டதில் பிரபல ரவுடி உயிரிழந்த சம்பவம் சென்னையில் ரவுடிகள் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget