Chennai Rains: விட்டுவிட்டு தொடரும் கனமழை..! சென்னை மக்கள் மீண்டும் அவதி..!
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.
நேற்று வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.
கனமழை :
இதன் காரணமாக நேற்று காலை 6 மணிமுதல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யவில்லை. மழை இல்லாத காரணத்தினால் சாலையில் தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமமில்லாமல் வாகனங்களை இயக்கினர். பொதுமக்களில் அன்றாட வாழ்க்கையும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்தநிலையில், நேற்று இரவு முழுவதும் சென்னையில் மழையின் தாக்கம் மீண்டும் தொடங்கியது. நேற்று இரவு தொடங்கிய கனமழை விட்டு விட்டும், அதிகாலை நேரத்தில் தொடர்ந்து பெய்தும் வந்தது. இதனால் சென்னையில் உள்ள சாலைகளில் மீண்டும் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன்படி, பெருங்குடி, கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தற்போதுவரை கனமழை நீடித்து வருகிறது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 12, 2022
மழை நிலவரம் :
13.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2022-11-13-04:17:45 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக தாம்பரம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/Ukb4ZqtnKH
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 12, 2022
சென்னை :
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.